Kathir News
Begin typing your search above and press return to search.

நீங்கள் ஒரு லெஜன்ட்; ஸ்டூவர்ட் பிராட்டை பாராட்டிய யுவராஜ்சிங்.!

நீங்கள் ஒரு லெஜன்ட்; ஸ்டூவர்ட் பிராட்டை பாராட்டிய யுவராஜ்சிங்.!

நீங்கள் ஒரு லெஜன்ட்; ஸ்டூவர்ட் பிராட்டை பாராட்டிய யுவராஜ்சிங்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 July 2020 12:21 PM GMT

டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி ஏழாவது பவுலர் என்ற பெருமையை பெற்றுள்ளார் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்.

இந்த சாதனைக்காக இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ் சிங் ஸ்டூவர்ட் பிராட்டுக்கு ட்விட்டர் பக்கத்தில் பாராட்டை தெரிவித்துள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில் அவர் கூறியது: நான் ஸ்டூவர்ட் பிராட் பற்றி ஏதாவது எழுதினால் அந்த சமயத்தில் நான் அவருடைய ஓவரில் 6 பந்துகலில் 6 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்த தான் மக்கள் நினைத்து வருகிறார்.

தற்போது அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி பெரும் சாதனை படைத்துள்ளார். எனது ரசிகர்கள் அனைவரும் அவரை பாராட்ட வேண்டும். 500 விக்கெட்டுகள் எடுப்பது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை.

https://twitter.com/YUVSTRONG12/status/1288370088223989760

அதற்கு தீவிரமாக உழைக்க வேண்டும் மற்றும் ஒரு தீவிரமாகப் போராட வேண்டும். ஸ்டூவர்ட் பிராட் நீங்கள் ஒரு லெஜன்ட் . உங்களின் சாதனைக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News