Kathir News
Begin typing your search above and press return to search.

மன உளைச்சலால் சுஷாந்த்தை அடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நடிகர் - அதிர்ச்சியில் திரையுலகம்.?

மன உளைச்சலால் சுஷாந்த்தை அடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நடிகர் - அதிர்ச்சியில் திரையுலகம்.?

மன உளைச்சலால் சுஷாந்த்தை அடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நடிகர் - அதிர்ச்சியில் திரையுலகம்.?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 July 2020 8:09 AM GMT

இந்திய கிரிக்கெட் வீரர் வாழ்க்கை கதையில் நடித்த சுஷாந்த் கடந்த மாதம் 14 ஆம் தேதி அன்று திடீரென தற்கொலை செய்து கொண்டார். இவர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து மக்களின் மனதை வென்றவர்.இவர் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துக்கொண்டார் என பல்வேறு தரப்பிலும் பேசப்பட்டு வருகிறது. இன்னிலையில் மற்றொரு நடிகர் மன உளைச்சலால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது. திரையுலகினருக்கு அதிர்ச்சியை அளிக்கிறது.

கொரோனா காரணமாக கடந்த நான்கு மாதங்களாக லாக்டோன் போடப்பட்டுள்ளது இதனால் பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தினசரி சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் முழுமையாக பாதிக்கப்பட்டும் உள்ளனர். இதற்கிடையே ஒரு சில சினிமா நடிகர்,நடிகையர் சினிமா தொழிலாளர்கள் மன உளைச்சலில் உள்ளனர். இந்நிலையில் பிரபல மராத்தி நடிகர் அசுதோஷ் பாக்ரே என்பவர் 32 வயதான இவர் நேற்று தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.இவர் பிரபல மராத்தி நடிகர் ஆவார். இவர் இசார் தர்லா பக்கா, பவர் ஆகிய படங்களில் நடித்தவர்.

இவர் லாக்டோன் காரணமாக மும்பையில் இருந்து தனது சொந்த ஊரான மகாராஷ்டிரா விற்கு குடியேறி இருக்கிறார்.இந்நிலையில் அவர் சொந்த வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் மன உளைச்சல் காரணமாக இறந்திருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கருதப்படுகிறது.மேலும் விசாரணை நடக்கிறது. அசுதோஷ் மனைவி பிரபல மராத்தி நடிகை ஆவார்.இவர் டிவி சீரியல்களில் நடித்து வருகிறார். பாலிவுட் மற்றும் மராத்தி நடிகர்கள் இடையே இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.மராத்தி நடிகர்,நடிகையர், ரசிகர்கள் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Next Story