Kathir News
Begin typing your search above and press return to search.

அப்பாக்கு இணையாக மகளும் இருவேடங்களில் நடிக்கிறார் - ஸ்ருதிஹாசன் எடுக்கும் அவதாரம்..!

அப்பாக்கு இணையாக மகளும் இருவேடங்களில் நடிக்கிறார் - ஸ்ருதிஹாசன் எடுக்கும் அவதாரம்..!

அப்பாக்கு இணையாக மகளும் இருவேடங்களில் நடிக்கிறார் - ஸ்ருதிஹாசன் எடுக்கும் அவதாரம்..!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 July 2020 1:28 PM GMT

உலக நாயகன் கமலஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் தற்போது தெலுங்கில் இரு வேடங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் அவர் அம்மா,மகளாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

நடிகை ஸ்ருதிஹாசன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு "லாபம்" என்ற படத்தில் நடித்து வருகிறாராம்.

இந்நிலையில் இவரது குறும்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இதனால் இவர் கிராக் என்ற படத்திலும் கமிட்டாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் இவர்களுக்கு வாய்ப்பு குறைந்த காரணத்தினால் இவர் தெலுங்கில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் தெலுங்கில் ஸ்ருதிஹாசன் தேஜா மற்றும் கோபிசந்த் கூட்டணியில் இணைந்திருக்கிறார்.

இவர் சுமார் 7 வருடங்களுக்கு முன்பு இவர்கள் இணைந்து நடித்த Balupu Krack என்ற திரைப்படம் பெரும் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

ஸ்ருதிஹாசன் முதல் முறையாக இரண்டு வேடங்களில் நடிப்பது இதுவே அதும் அம்மா,மகள் என்ற இரு வேடங்களில் நடிக்கிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News