Kathir News
Begin typing your search above and press return to search.

இரண்டாயிரத்துக்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் காணவில்லை - தெலுங்கானாவில் பரபரப்பு.!

இரண்டாயிரத்துக்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் காணவில்லை - தெலுங்கானாவில் பரபரப்பு.!

இரண்டாயிரத்துக்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் காணவில்லை - தெலுங்கானாவில் பரபரப்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 July 2020 7:09 AM GMT

தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இரண்டாயிரத்துக்கும் அதிகமானோரை கடந்த பத்து நாட்களாக காணவில்லை என்று அம்மாநில சுகாதார அமைச்சகத்தின் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா வைரசால் இதுவரை 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 396 உயிரிழந்துள்ளனர் மற்றும் 27,295 குணம் அடைந்துள்ளனர்.

தற்போது அம்மாநிலத்தின் அரசு மருத்துவனையிலும் மற்றும் கொரோனா மையங்களில் பரிசோதனை செய்து கொரோனா வைரஸ் இருப்பது உறுதியான இரண்டாயிரத்துக்கும் அதிகமானோரை கடந்த பத்து நாட்களாக காணவில்லை என்று சுகாதார அமைச்சகத்தின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. கொரோனா பரிசோதனை செய்த சமயத்தில் தவறான செல்போன் எண்கள், தவறான விட்டு விளாசம் ஆகியவற்றை கொடுத்ததால் அவர்களை சுகாதார மற்றும் உள்ளாட்சி அதிகாரியால் கண்டறிய முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story