Kathir News
Begin typing your search above and press return to search.

ராகவா லாரன்ஸ் இயக்கும் படம் ஓடிடியில் ரிலீஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு.!

ராகவா லாரன்ஸ் இயக்கும் படம் ஓடிடியில் ரிலீஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு.!

ராகவா லாரன்ஸ் இயக்கும் படம் ஓடிடியில் ரிலீஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 July 2020 1:52 PM GMT

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணத்தினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. ரிலீசுக்கு தயாராக உள்ள சில படங்கள் தியேட்டர்கள் திறக்கப்படாததால் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது.

தற்போது தமிழில் ஜோதிகா நடித்த பொன்மகள்வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடித்த பென்குயின் ஆகிய படங்கள் ஒடிடியில் ரிலீஸாகியுள்ளது. இதனை தொடர்ந்து பாலிவுட் உள்பட பல மொழிகளில் படங்கள் ஒடிடியில் ரிலீஸ் ஆகியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய்குமார் நடிப்பில் உருவாக்கிய படம் "லட்சுமி பாம்" . இந்த படம் ரிலீசாக இருப்பதாக அதிகபூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைப்பற்றி லாரன்ஸ் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியது: லட்சுமி பாம் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை வீட்டிலிருந்தே சந்தோஷமாக பாருங்கள் என பதிவிட்டுள்ளார். இப்படம் விரைவில் ஹாட்ஸ்டாரில் வெளியாக இருப்பதாக பதிவிட்டுள்ளார்.


இந்த லட்சுமி பாம் படம் தமிழில் ரிலீஸ் ஆன காஞ்சனா திரை படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அக்ஷய்குமார், கியரா அத்வானி உள்பட பலர் நடித்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News