Kathir News
Begin typing your search above and press return to search.

ரம்யாகிருஷ்ணன், நயன்தாரா, சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு அரசுக்கு சொந்தமான நிலம் பல கோடிக்கு விற்கப்பட்டதா? - அம்பலமான மோசடி.!

ரம்யாகிருஷ்ணன், நயன்தாரா, சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு அரசுக்கு சொந்தமான நிலம் பல கோடிக்கு விற்கப்பட்டதா? - அம்பலமான மோசடி.!

ரம்யாகிருஷ்ணன், நயன்தாரா, சச்சின் டெண்டுல்கர்  ஆகியோருக்கு அரசுக்கு சொந்தமான நிலம் பல கோடிக்கு விற்கப்பட்டதா? - அம்பலமான மோசடி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 July 2020 10:23 AM GMT

அரசுக்கு சொந்தமான நிலம் நயன்தாராவுக்கு,ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் உட்பட சில பிரபலங்களுக்கு விற்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த கோட்டா ரெட்டி. இவர், ஆதித்யா ஹோம்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் கம்பெனி நிறுவனர்.இந்த நிறுவனத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து இயக்குனராக பதவி வகித்தவர் சுதீர்ரெட்டி.

இவர்கள் உறவினர்களுடன் பிரச்சினை ஏற்பட்டதால் புறம்போக்கு நிலத்தை பல முக்கிய பிரமுகர்களை ஏமாற்றி விற்றது அம்பலமாகியிருக்கிறது. இதுபற்றி ஜூம் வீடியோவில் செய்தியாளர்களிடம் பேசிய சுதீர் ரெட்டி, பரபரப்பு புகார்களை தெரிவித்துள்ளார்.மேலும் இவர் அளித்த பரப்பரப்பான புகாரில் தெலுங்கானா ரங்கா ரெட்டி மாவட்டத்திலுள்ள ராவுரியாலா கிராமத்தில் அரசுக்கு சொந்தமான ஏரி உள்ளது.

அதைச் சுற்றி இடம் தாராளமாக இருக்கும் அந்த இடத்தில் கட்டிடங்கள் கட்ட அனுமதி இல்லை. ஆனால் இவர் இதை மறைத்து அங்குள்ள நிலங்களை விவசாயிகளிடமிருந்து வெறும் ஐந்து லட்சத்திற்கு மட்டும் கோட்டா ரெட்டி விலைக்கு வாங்கி இருக்கிறார். பின்னர் அந்த நிலத்தை பல ஆட்டங்களுக்கு ஏக்கர் ஒரு கோடி என்று விற்றிருக்கிறார்.

மேலும் இந்த நிலத்தை ரம்யா கிருஷ்ணன், நயன்தாரா ஆகியோருக்கு ஒரு ஏக்கர் என விற்றுறிக்கிறார்.மேலும் 2008 ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரது மனைவி அஞ்சலி 6.5 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.மேலும் இந்த நிலத்தை ஐந்து எம்பிக்களுக்கு விற்றிருக்கிறார் என்பது விசாரணையில் கூறியிருக்கிறார் சுதீர் ரெட்டி .

இதுபற்றிய தகவல் அவரது குடும்ப பிரச்சினையால் வெளிவந்திருக்கிறது என்பது தெரியவந்துள்ளது. மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறியிருப்பது பாதிக்கப்பட்டவர் கம்ப்ளைன்ட் கொடுத்தாள் தக்க நடவடிக்கை எடுப்போம் என்று அறிவித்திருக்கின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News