Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி : மீண்டும் திறக்கப்பட்ட கடற்கரை சாலை.!

புதுச்சேரி : மீண்டும் திறக்கப்பட்ட கடற்கரை சாலை.!

புதுச்சேரி : மீண்டும் திறக்கப்பட்ட கடற்கரை சாலை.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 July 2020 10:34 AM GMT

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக கடந்த மார்ச் மாதம் கடற்கரை மூடப்பட்டது. ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டவுடன் மீண்டும் கடற்கரை திறக்கப்பட்டது.

இந்தநிலையில் மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்தது. அப்போது 6-ம் கட்டமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் மீண்டும் கடற்கரை சாலை கடந்த 3-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் கடற்கரையில் நடைபயிற்சி செல்வோர் மற்றும் பல்வேறு கட்சியினர் கடற்கரை சாலையை நடைபயிற்சிக்கு அனுமதிக்கும் வகையில் திறந்துவிடுமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்தநிலையில் கடற்கரை இன்று முதல் மீண்டும் பொதுமக்கள் நடைபயிற்சி செல்வதற்கு மட்டும் அனுமதிக்கும் வகையில் திறக்கப்பட்டது

அதன்படி கடற்கரை சாலை காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும். இங்கு நடைபயிற்சிக்கு வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணியவேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். எச்சில் துப்பக்கூடாது. பொது நிகழ்ச்சிகளோ, கூட்டங்களோ நடத்த அனுமதி இல்லை. அவற்றை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் அருண் எச்சரித்துள்ளார்.

Next Story