Kathir News
Begin typing your search above and press return to search.

நடிகர் அமிதாப் பச்சன் நான் கொரோனாவிலிருந்து மீண்டு வரவில்லை என்று விளக்கம்.!

நடிகர் அமிதாப் பச்சன் நான் கொரோனாவிலிருந்து மீண்டு வரவில்லை என்று விளக்கம்.!

நடிகர் அமிதாப் பச்சன் நான் கொரோனாவிலிருந்து மீண்டு வரவில்லை என்று விளக்கம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 July 2020 7:47 AM GMT

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் கொரோனாவில் இருந்து மீண்டுவிட்டதாக செய்திகள் வெளியானநிலையில் அது உண்மை இல்லை, தவறான தகவல் என நடிகர் அமிதாப்பச்சன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக சாதாரண மக்கள் தொடங்கி, பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.

இந்நிலையில் பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப்பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா ராயின் மகள் ஆகிய நால்வருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அமிதாப்பச்சன் மற்றும் அபிஷக் பச்சன் இருவரும் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் இருவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவந்தனர். பின்னர் அவர்களும் மூச்சு திணறல் அதிகமானதை அடுத்து அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் நான் குணமாகிவிட்டதாக வெளியாகும் செய்திகள் தவறானது. போலியானது. பொறுப்பற்றது என நடிகர் அமிதாப்பச்சன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அமிதாப், அபிஷேக் ஐஸ்வர்யா மற்றும் ஆரத்யா ஆகிய நான்குபேரும் நானாவதி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

Next Story