Kathir News
Begin typing your search above and press return to search.

பொழப்பு ஓடணும்! எப்படியாவது போராட்டம் நடத்தியே ஆகணும் - அடம் பிடிக்கும் ஸ்டாலின் : ஆட்டத்தை முடித்து வைத்த முதல்வர் எடப்பாடி!

பொழப்பு ஓடணும்! எப்படியாவது போராட்டம் நடத்தியே ஆகணும் - அடம் பிடிக்கும் ஸ்டாலின் : ஆட்டத்தை முடித்து வைத்த முதல்வர் எடப்பாடி!

பொழப்பு ஓடணும்! எப்படியாவது போராட்டம் நடத்தியே ஆகணும் - அடம் பிடிக்கும் ஸ்டாலின் : ஆட்டத்தை முடித்து வைத்த முதல்வர் எடப்பாடி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 July 2020 12:52 PM GMT

"மின்கட்டணத்தில் குளறுபடி என்று சொல்லி 21-ம்தேதி திமுக தலைவர் ஸ்டாலின் போராட்டம் அறிவித்திருக்கிறாரே" என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.

அதில், மின்கட்டணத்தில் எந்த குளறுபடியும் கிடையாது. நீதிமன்றத்திற்கு சென்றார்கள். நீதிமன்றமே தீர்ப்பு வழங்கிவிட்டது. இதற்கு மேலும் என்ன சந்தேகம் என்பது எங்களுக்குத் தெரியவில்லை.

ஒரே ஒரு உதாரணத்தை சொல்கிறேன். இன்றைக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் என்ற கடுமையான நோய் வந்துவிட்டது. இந்த காலகட்டத்தில், மின்சாரத் துறையில் உள்ள ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று கணக்கிட முடியாது என்று தெரிவித்து விட்டதன் அடிப்படையில் தான், நான்கு மாதங்களுக்கும் இணைந்து ஒன்றாக அந்தப் பணியை துவங்கினார்கள்.

எனவே, நான்கு மாதங்களுக்குண்டான கட்டணத்தை எடுத்தார்கள். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அது இரண்டு மாதமாக பிரிக்கப்பட்டது. 4 மாதத்திற்கு 800 யூனிட் மின்சாரத்தை ஒருவர் பயன்படுத்தியிருந்தால், 2 மாதத்திற்கு பிரித்து தலா 400 யூனிட்டாக பிரித்து, இந்த 400 யூனிட்டில் 100 யூனிட்டை கழித்து மீதி 300 யூனிட்டுக்குத்தான் பணம் வாங்குகிறார்கள்.

800 யூனிட் எனும்போது, 500 யூனிட்டுக்கு மேல் சென்றால் கூடுதலாக கட்டணம் ஆகும். அந்த difference கட்டணத்தை அடுத்த மாதம் பயன்படுத்தும் மின்சாரத்தில் கழிக்கப்படுகிறது. இதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, தீர்ப்பும் கொடுத்துவிட்டது. இவர் வேண்டுமென்றே ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி போராட்டம் நடத்தவேண்டும் என்ற அடிப்படையில் இதைச் சொல்லி போராட்டம் நடத்துகிறார் என்று கூறியுள்ளார்.

Next Story