Kathir News
Begin typing your search above and press return to search.

ஒரு கோடி என்னும் மைல் கல்லைத் தாண்டியது கோவிட் பரிசோதனை.!

ஒரு கோடி என்னும் மைல் கல்லைத் தாண்டியது கோவிட் பரிசோதனை.!

ஒரு கோடி என்னும் மைல் கல்லைத் தாண்டியது கோவிட் பரிசோதனை.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 July 2020 1:46 AM GMT

கோவிட் பரிசோதனைகளின் எண்ணிக்கை ,குறிப்பிடத்தக்க சாதனையாக 10 மில்லியன் (1 கோடி) என்னும் மைல்கல்லைத் தாண்டியுள்ளது. விரிவான பரிசோதனை மற்றும் '' சோதனை, கண்டறிதல், சிகிச்சை அளித்தல்'' என்னும் உத்தியில் கவனம் செலுத்தியதாலும், மத்திய அரசு மற்றும் மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களின் பல்வேறு தொடர் நடவடிக்கைகளாலும் இந்தச் சாதனை நிகழ்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 3,46,459 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன. மொத்தம் சோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை தற்போது, 1,01,35,525 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் சோதனைக்கூடங்களின் கட்டமைப்பைத் தொடர்ந்து விரிவுபடுத்தி வருவதால், இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது. இன்று வரை, 1105க்கும் அதிகமான சோதனைக்கூடங்கள், மக்கள் கோவிட் சோதனை செய்து கொள்வதற்காக இயங்கி வருகின்றன. அரசுத் துறையில் 788 ஆய்வுக்கூடங்களும், தனியார் பிரிவில் 317 சோதனைக்கூடங்களும் இயங்குகின்றன. பல்வேறு வகையான சோதனைகள் மூலம் பரிசோதனைக் கூடங்கள் வருமாறு;

ரியல் டைம் ஆர்டி பிசிஆர் அடிப்படையிலான சோதனைக் கூடங்கள் ; 592 ( அரசு -368 + தனியார்- 224)

ட்ரூநேட் அடிப்படையிலான சோதனைக்கூடங்கள்; 421( அரசு- 387+ தனியார் 34)

சிபிஎன்ஏஏடி அடிப்படையிலான சோதனைக்கூடங்கள்; 92 ( அரசு-33+ தனியார்-59)

மத்திய அரசு, மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களின் ஒத்துழைப்புடன் கோவிட்-19 கட்டுப்படுத்துதல் மற்றும் மேலாண்மை முயற்சிகளில் உறுதியான கவனம் செலுத்தி வருவதால், கோவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை இன்று 4,24,432 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், மொத்தம் 15,350 கோவிட் நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

தற்போது சிகிச்சை பெற்று வரும் கோவிட்-19 நோயாளிகளை விட 1,71,145 பேர் அதிகமாக குணமடைந்துள்ளனர். இது தேசிய குணமடைந்தோர் விகிதத்தை 60.86 சதவீதமாக உயர்த்தியுள்ளது. 2,53,287 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். கோவிட்-19 குறித்த தொழில்நுட்ப விஷயங்கள், வழிகாட்டுதல்கள், அறிவுரைகள் பற்றிய அனைத்து அதிகாரபூர்வ , அண்மைத் தகவல்களுக்கு தயவுசெய்து இந்தத் தளங்களை அணுகவும்; https://www.mohfw.gov.in/ மற்றும் @MoHFW_INDIA .

தொழில்நுட்பம் தொடர்பான கேள்விகளை technicalquery.covid19@gov.in என்ற தளத்துக்கு அனுப்பலாம். மற்ற கேள்விகளுக்கு ncov2019@gov.in மற்றும் @CovidIndiaSeva என்ற தளங்களை அணுகலாம்.

கோவிட்-19 பற்றிய தகவல் ஏதேனும் தேவையென்றால், தொடர்புகொள்ள வேண்டிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தின் உதவி மைய எண்கள்;+91-11-23978046 or 1075 ( கட்டணமில்லா தொலைபேசி). மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் உதவி மைய எண்கள் பட்டியல் https://www.mohfw.gov.in/pdf/coronvavirushelplinenumber.pdf என்ற தளங்களில் கிடைக்கும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News