Kathir News
Begin typing your search above and press return to search.

நடிகர் ஜெய் நடித்து தமிழில் வெளியான பலூன் திரைப்படம் தெலுங்கில் வெளியாகிறது.!

நடிகர் ஜெய் நடித்து தமிழில் வெளியான பலூன் திரைப்படம் தெலுங்கில் வெளியாகிறது.!

நடிகர் ஜெய் நடித்து தமிழில் வெளியான பலூன் திரைப்படம் தெலுங்கில் வெளியாகிறது.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 July 2020 12:30 PM GMT

கொரோனா வைரஸ் காரணத்தினால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கால் மூன்று மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் எடுத்து முடித்த திரைப்படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட்டு வருகின்றனர். ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தால், கீர்த்தி சுரேஷ் நடித்த பென்குயின், யாதுமாகி ஆகிய படங்கள் ஓடிடியில் வெளியாகி உள்ளது.

தற்போது இயக்குனர் சினிஷ் ஸ்ரீதரன் இயக்கத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் பலூன். இந்தப் படத்தில் ஜெய், அஞ்சலி, ஜனனி அய்யர், யோகிபாபு போன்ற பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார் மற்றும் சரவணன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த படத்தை தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பலூன் என்கிற பெயரிலேயே ஓடிடியில் வரும் பத்தாம் தேதி வெளியாக உள்ளது.

Next Story