Kathir News
Begin typing your search above and press return to search.

கூகுள் பிளே ஸ்டோரில் அறிமுகப்படுத்திய சில நாட்களிலேயே பத்து லட்சம் பதிவிறக்களைக் கடந்துள்ளது "ஜியோ மார்ட்" செயலி.!

கூகுள் பிளே ஸ்டோரில் அறிமுகப்படுத்திய சில நாட்களிலேயே பத்து லட்சம் பதிவிறக்களைக் கடந்துள்ளது "ஜியோ மார்ட்" செயலி.!

கூகுள் பிளே ஸ்டோரில் அறிமுகப்படுத்திய சில நாட்களிலேயே பத்து லட்சம் பதிவிறக்களைக் கடந்துள்ளது ஜியோ மார்ட் செயலி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 July 2020 11:18 AM GMT

கூகுள் பிளே ஸ்டோரில் அறிமுகப்படுத்திய சில நாட்களிலேயே பத்து லட்சம் பதிவிறக்களைக் கடந்துள்ளது "ஜியோ மார்ட்" செயலி. இது கூகுள் பிளே ஸ்டார் மற்றும் ஆப்பிள் IoS ஸ்டோர் இரண்டிலும் உள்ளது. Annie செயலி தரும் தகவல் படி, கூகுள் பிளே "ஷாப்பிங்" பிரிவில் ஜிமோர்ட் மூன்றாவது இடத்திலும், ஆப்பிள் ஸ்டோர் செயலியில் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

மொபைல்களை அதிகம் பயன்படுத்தும் தற்போதைய தலைமுறைக்கு "ஜியோ மார்ட்" மூலம் ஆர்டர்களை வழங்கும் வசதி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மார்ச் இறுதியில்" jiomart.com" ஒரே நேரத்தில் 200 நகரங்களை நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. "ஜியோ மார்ட்" தொடர்ந்து புதுப்புது தயாரிப்பு அம்சங்கள் மற்றும் பல்வேறு வகையான பிராண்டுகளை வழங்கி வருகிறது. இதில் தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள், சமயமையலறை பொருட்கள், பூஜை பொருட்கள், காலணிகள், குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் முதலியவற்றை உள்ளடக்கி உள்ளது.

மேலும் இது அத்தியாவசிய பொருட்கள் அனைத்துக்கும் 5% தள்ளுபடி வழங்குகிறது.ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்யின் தற்போதய நிர்வாகி மற்றும் இயக்குநருமான முகேஷ் அம்பானி, "ஜியோ மார்ட்" நாடு முழுவதும் ஒரே நாளில் 2.5 லட்சம் ஆர்டர்களை எடுத்து வருவதாக கூறுகிறார்.

மேலும் "ஜியோ மார்ட்" தற்போது அத்தியாவசிய பொருட்கள் தவிர்த்து, எலக்ட்ரானிக்ஸ், பேஷன், மருந்து இன்னும் பல வகைகளை கொண்டுவர ஆர்வம் செலுத்தி உள்ளது. வரும் வருடங்களில் இந்தியாவில் இன்னும் பல நகரங்களை உள்ளடக்குவோம் என்று கூறியுள்ளார்.

https://swarajyamag.com/insta/reliance-jiomart-app-crosses-10-lakh-downloads-on- google-play-store

Next Story
கதிர் தொகுப்பு
Trending News