Kathir News
Begin typing your search above and press return to search.

கேரளாவுக்கு இ-பாஸ் வாங்கி விட்டு குமரிக்கு வந்த வாகனம் பறிமுதல்.!

கேரளாவுக்கு இ-பாஸ் வாங்கி விட்டு குமரிக்கு வந்த வாகனம் பறிமுதல்.!

கேரளாவுக்கு இ-பாஸ் வாங்கி விட்டு குமரிக்கு வந்த வாகனம் பறிமுதல்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 July 2020 1:56 AM GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மாவட்ட எல்லையான களியக்காவிளை, ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம் சோதனை சாவடிகளில் காவல் துறை மற்றும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஒரு டெம்போ வாகனம் ஆட்களை ஏற்றிக்கொண்டு குமரியை நோக்கி வந்தது. ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் காவல் துறையினர் அந்த வாகனத்தை தடுத்து விசாரணை நடத்தினர்.

அப்போது இ-பாஸ் வாங்கி இருந்தது தெரிய வந்தது. சென்னையில் இருந்து கேரள மாநிலத்துக்கு செல்வதற்காக இ-பாஸ் வாங்கி இருந்தனர். ஆனால் வாகனத்தில் இருந்த 8 பேரும் 3 குடும்பங்களை சேர்ந்தவர்கள். அவர்கள், கன்னியாகுமரி மாவட்டம் திக்கணங்கோடு, ஆலஞ்சி, மேக்காமண்டபத்தை சேர்ந்தவர்கள்.

கேரளாவுக்கு செல்ல அனுமதி வாங்கிவிட்டு குமரி மாவட்டத்துக்குள் செல்வதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஆரல்வாய்மொழி காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டது. வாகனத்தை ஓட்டி வந்த சென்னை அண்ணாநகரை சேர்ந்த ராம்ராஜ் (வயது 33) என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வாகனத்தில் வந்த 8 பேருக்கும் சளி மாதிரி எடுக்கப்பட்டு அவர்கள் தனிமப்படுத்துதல் முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News