Kathir News
Begin typing your search above and press return to search.

"அமைதியாக கடந்து செல்வோம்" - ஏ.ஆர்.ரகுமான் அதிரடியான ட்விட்!!!

"அமைதியாக கடந்து செல்வோம்" - ஏ.ஆர்.ரகுமான் அதிரடியான ட்விட்!!!

அமைதியாக கடந்து செல்வோம் - ஏ.ஆர்.ரகுமான் அதிரடியான ட்விட்!!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 July 2020 2:43 PM GMT

ஏ.ஆர்.ரகுமான் தமிழ் சினிமாவில் முக்கிய, முன்னணி இசைக் கலைஞர்களில் ஒருவராக திகழ்கிறார். இசையமைப்பாளரிடம் பல படங்களில் கீபோர்டு வாசித்த ரகுமான் தற்போது வளர்ந்து தமிழ் சினிமாவில் முதன் முதலாக ரோஜா என்கிற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த படத்திற்கு இயக்குனர் இயக்குநர் மணிரத்னத்தின் ஆவார்.

மேலும் இவர் இசை பாணியே மக்களை கவரும் விதமாகவும் இருந்தது. இதனால் இவருக்கு தமிழ் படங்கள் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. அதனால், இந்திப் பட உலகம் ரகுமானை நோக்கி வந்தது. "ஸ்லம் டாக் மில்லியனியர்" படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளைத் தட்டி வந்தார்.

மேலும் தற்பொழுது ஏ.ஆர்.ரகுமான் தில் பேச்சாரா எனும் இந்திப் படத்திற்கு சமீபத்தில் இசையமைத்திருந்தார். இப்படத்தின் நாயகன் சுஷாந்த் சிங் ராஜ்புட். தில் பேச்சாரா படத்தின் இயக்குநர் தன்னிடம் பேசுகையில் "உங்களை வைத்து இந்தப் படம் இசையமைக்க வேண்டாம்" எனச் சிலர் தடுத்தார்கள் பாலிவுட்டில் சிலர் உங்களைப் பற்றி வதந்திகளைக் கிளப்புகிறார்கள்' என்று கூறினார் என்று ஏ.ஆர். ரகுமான் தெரிவித்திருந்தார்.

இது இந்திய திரைஉலகில் பரப்பரான பேச்சைக் கிளப்பியது. வைரமுத்து, லியோனி உள்ளிட்ட பலரும் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவான கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர். ஏ.ஆர்,ரகுமானுக்கு ஆதரவு இந்தி திரைஉலகிலிருந்தும் கிடைத்து வருகிறது. பிரபல நடிகர் சேகர் கபூர், *நீங்கள் ஆஸ்கரையே வென்று விட்டீர்கள். பாலிவுட் உங்களின் திறமையைப் பயன்படுத்த முடியாத அளவுதான் இருக்கிறது* என்று பதிந்துள்ளார்.

அவருக்குப் பதில் அளிக்கும் விதமாக ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கதில் இழந்தை பணத்தை மீட்டு விடலாம். இழந்தை புகழை மீண்டும் மீட்டு விடலாம். ஆனால் நேரத்தை இழந்தால் மீட்கவே முடியாது என்றும் பதிவீட்டுள்ளார். நாம் செய்ய வேண்டிய செயல்கள் ஏராளம் இருக்கின்றன. எனவே அமைதியாகக் கடந்துசெல்வோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News