Kathir News
Begin typing your search above and press return to search.

நடிகர் ரஜினி "இ-பாஸ்" எடுத்தது 'உறுதியானது'!

நடிகர் ரஜினி "இ-பாஸ்" எடுத்தது 'உறுதியானது'!

நடிகர் ரஜினி இ-பாஸ் எடுத்தது உறுதியானது!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 July 2020 11:56 AM GMT

சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரஜினி தனது பண்ணை வீட்டிற்கு சென்ற புகைப்படங்கள் வெளியானதை அடுத்து தற்பொழுது இவர் இ-பாஸ் வாங்கி தான் சென்றாரா என்ற சர்ச்சை கிளம்பியது.

கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு ரஜினி தனது லம்போகினி காரை தானே ஓட்டி சென்றது ட்ரெண்டானது. அதனையடுத்து பலரும் இதைப் பற்றி பேச ஆரம்பித்தனர்.

இ-பாஸ் பெற்றாரா என்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இன்று தனது கேளம்பாக்கம் பண்ணை வீட்டிற்கு மீண்டும் புறப்பட்டுள்ளார் நடிகர் ரஜினி.

இதற்காக முறையாக அவர் இ-பாஸ் பெற்றிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மருத்துவ காரணங்களுக்காக செல்வதாக இ-பாஸ் அவர் பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இ-பாஸ் வெளியாகி விவாதமாகி உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News