Kathir News
Begin typing your search above and press return to search.

"ஓ மை கடவுளே" தெலுங்கு ரீமேக்கிலும் நடிக்கிறாரா விஜய் சேதுபதி?

"ஓ மை கடவுளே" தெலுங்கு ரீமேக்கிலும் நடிக்கிறாரா விஜய் சேதுபதி?

ஓ மை கடவுளே தெலுங்கு ரீமேக்கிலும் நடிக்கிறாரா விஜய் சேதுபதி?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 July 2020 12:54 PM GMT

தமிழில் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற படம் "ஓ மை கடவுளே" ஒரு புதிய கதை தொடரில் உருவான இப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. கடந்த பிப்ரவரி மாதத்தில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம். இந்த படத்தில் அசோக் செல்வன், எம். எஸ். பாஸ்கர்,ரித்திகாசிங், வாணிபோஜன், ஷாரா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும், விது அயன்னா ஒளிப்பதிவில் லியான் ஜேம்ஸ் இசையமைத்திருந்தார்.

தற்பொழுது "ஓ மை கடவுளே" படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன் உரிமையை பி.வி.பி சினிமா கைப்பற்றினர். முதலில் தெலுங்கு ரீமேக்கையும் அஷ்வத் மாரிமுத்து இயக்குவதாக கூறப்பட்டது. ஆனால் இயக்குநர் தருண் பாஸ்கர் இந்த படத்தின் டயலாக்கை எழுதுவதாகவும், அசோக் செல்வன் நடித்த கதாபாத்திரத்தில் விஷ்வக் சென் நடிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது தெலுங்கிலும் விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் அவரே நடிக்க வைக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தெரிய வரும் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News