Kathir News
Begin typing your search above and press return to search.

பாகுபலி பட இயக்குனர் ராஜமௌலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி.!

பாகுபலி பட இயக்குனர் ராஜமௌலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி.!

பாகுபலி பட இயக்குனர் ராஜமௌலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 July 2020 2:30 AM GMT

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாக பரவ தொடங்குகிறது. சென்னையில் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டி இருக்கிறது.மேலும் ஆயிரக்கணக்கானோர் இறந்தும் போகின்றனர். அரசு இதற்காக பல நடவடிக்கை எடுத்தாலும் இதனை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கிறது.

இந்த தொற்று சாதாரண மக்கள் முதல் சினிமா நட்சத்திரங்கள்,அமைச்சர்கள் ஆகியோருக்கும் இந்த தொற்று பரவ தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் பாகுபலி என்ற மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் மற்றும் அவரது குடும்பத்திற்கு கொரோனா தோற்று பாதிக்கப்பட்டது உறுதியாகியுள்ளது. ராஜமௌலி தனது ட்விட்டர் பக்கத்தில் எனக்கும் தனது குடும்பத்திற்கும் சில நாட்களுக்கு முன்பு லேசாக காய்ச்சல் இருந்ததாகவும் தானாகவே குணமாகி இருந்தாலும் நாங்கள் கொரோனா டெஸ்ட் எடுத்துக் கொண்டோம் என்று கூறினார்.

அந்த சோதனை முடிவு எங்களுக்கு லேசாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது என்பது உறுதியானது நாங்கள் எங்களை வீட்டில் தனிமை படுத்திக் கொண்டோம் என்கிறார். தற்பொழுது அவர் எந்த அறிகுறியும் இல்லாமலும் இப்பொழுது கொஞ்சம் மீண்டு இருக்கிறோம் என்றும் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தினால் மட்டுமே நாங்கள் மற்றவர்களுக்கு பிளாஸ்மா தானம் செய்ய முடியும் என்று குறிப்பிட்டிருந்தார்.

Next Story