Kathir News
Begin typing your search above and press return to search.

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்திற்கு நிதி எங்கிருந்து வந்தது.? கிடுக்கிப்பிடி விசாரணையில் உளறி மாட்டிக்கொண்ட செந்தில் வாசன்!

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்திற்கு நிதி எங்கிருந்து வந்தது.? கிடுக்கிப்பிடி விசாரணையில் உளறி மாட்டிக்கொண்ட செந்தில் வாசன்!

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்திற்கு நிதி எங்கிருந்து வந்தது.? கிடுக்கிப்பிடி விசாரணையில் உளறி மாட்டிக்கொண்ட செந்தில் வாசன்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 July 2020 5:02 AM GMT

கருப்பர் கூட்டம் சேனலுக்கு நிதி அளித்து வந்தவர்கள் யார் என்பது குறித்து, செந்தில்வாசனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் செந்தில் வாசன் முன்னுக்கும் பின் முரணான தகவல் தெரிவித்து உளறி வருவதால், காவல் துறையினர் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

கருப்பர் கூட்டம், சேனலின், கணக்கு வழக்கு சார்ந்த விஷயங்களை, செந்தில்வாசன் தான் கவனித்து வந்துள்ளார். சென்னை, தி.நகரில் இவர்களது அலுவலகம் செயல்பட்டு வந்த நிலையில், அலுவலகத்திற்கான வாடகை முதற்கொண்டு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு சம்பளம், இதர செலவுகளையும், செந்தில்வாசனே கவனித்து வந்துள்ளார்.

செந்தில்வாசன் மூலமாகவே சேனல் நடத்த நிதி வந்துள்ளது. காவல் துறையினர் ஏற்கனவே, கருப்பர் கூட்டத்தின் அலுவலகத்தில் நடத்தி சோதனையில், "மேலிட" கட்சி தொடர்பான சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

அதன் அடிப்படையில், நடத்தப்பட்ட விசாரணையில், சேனலுக்கு பணம் எங்கிருந்து வந்தது..? யாரிடம் இருந்து வந்தது..? என்பது குறித்து கேள்விகளுக்கு செந்தில் வாசன் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து வருவது அம்பலமாகியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு செந்தில்வாசன் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வந்த தகவல் ஊடகங்களில் வெளியானது. இந்த நிலையிலேயே மேற்கொண்டு விசாரணை தொடர்கிறது.

இந்துக்களுக்கு எதிராக செயல்படும் சக்திகள் மற்றும் பிற மதம் சார்ந்த அமைப்புகள் நிதி அளித்து வந்துள்ளன. அவர்கள் யார் என்பது குறித்து தெரிவிக்க செந்தில்வாசன் மறுப்பு தெரிவிக்கிறார்.

செந்தில்வாசனுக்கு அடுத்த நிலையில் பார்க்கப்படும், சுரேந்தரன் நடராஜன் பின்னணியில், மிகப்பெரிய அரசியல் பின்னணி கொண்ட கும்பல் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News