Kathir News
Begin typing your search above and press return to search.

தனுஷின் பிறந்தநாள் பரிசாக கர்ணன் பட போஸ்டரை வெளியிட்ட படக்குழுவினர்.!

தனுஷின் பிறந்தநாள் பரிசாக கர்ணன் பட போஸ்டரை வெளியிட்ட படக்குழுவினர்.!

தனுஷின் பிறந்தநாள் பரிசாக கர்ணன் பட போஸ்டரை வெளியிட்ட படக்குழுவினர்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 July 2020 11:07 AM GMT

தனுஷ் இன்று 38 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தனுஷ் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் கர்ணன். இவரு பிறந்தநாள் பரிசாக கர்ணன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளன. இந்த படம் மாரி செல்வராஜ் இயக்கத்தில், கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் தனுஷ் நடித்திருக்கும் இந்த படம் கர்ணன். இந்த திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் இன்று வெளியாகும் என்று இரண்டு நாட்களுக்கு முன்னரே மாரி செல்வராஜ் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார். அதனை அடுத்து தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டிருக்கிறது.

இந்த டைட்டில் போஸ்டரில் "நீதி சூரியனை போல முளைத்தெழக்கூடியது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தனுஷ் நடிப்பில் மற்றொரு படமாக வெளியாக இருக்கும் ஜகமே தந்திரம் படத்தில் "ரகிட" என்ற பாடல் வெளியாகி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய இரண்டு படங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் பாடலும் வெளியாகி இவர் பிறந்த நாளுக்கு ஒரு புதுவித பரிசாக இருக்கிறது. இது குறித்து சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

Next Story