Kathir News
Begin typing your search above and press return to search.

தொடர் ஊரடங்கால் வருமானத்திற்கு வழியின்றி மாற்று தொழிலில் குதித்த நடிகை!

தொடர் ஊரடங்கால் வருமானத்திற்கு வழியின்றி மாற்று தொழிலில் குதித்த நடிகை!

தொடர் ஊரடங்கால் வருமானத்திற்கு வழியின்றி மாற்று தொழிலில்  குதித்த நடிகை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 July 2020 6:39 AM GMT

கொரனா தொற்று காரணமாக லாக்டவுன் நீடித்துக் கொண்டே இருக்கிறது. இடையில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டாலும் கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்த லாக்டவுன் மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் திரைதுறையை சேர்ந்தவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

வசதி படைத்தவர்களை தவிர்த்து, அன்றாடம் பிழைப்பை நம்பி நடித்து வரும் "துணை நடிகர்கள்", மற்றும் நடுத்தர வசதி படைத்த நடிகர்கள் அன்றாட செலவிற்கு கூட அல்லாடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இவர்கள் தங்களின் குடும்பத்தை காப்பாத்த மாற்றுத்தொழில் இறங்கியுள்ளனர்.சினிமா தொழிலும் கைவிட, எவ்வித உதவியும் கிடைக்காமல் திண்டாடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட துணை நடிகர்கள் பலரும் காய்கறி, பழம், கருவாரு என வீதி வீதியாக சென்று விற்றுவருதை நாள்தோறும் பார்த்து வருகிறோம்.

அப்படித்தான் கேரளாவில் நடிகை ஒருவர் ஆட்டோ ஓட்டுநராக மாறியுள்ளார். 36 வயதான மஞ்சு என்ற அவர், கடந்த 15 வருடங்களாக நாடகத்தில் நடித்து வருகிறார்.

இதனால் மஞ்சுளா தனது கையில் இருக்கும் பணத்தை வைத்து ஒரு பழைய ஆட்டோ ஒன்றை வாங்கியுள்ளார் அதற்குத்தானே டிரைவர் ஆனார். மேலும் தினமும் வரும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News