Kathir News
Begin typing your search above and press return to search.

காவல் நிலையத்தில் சரமாரியாக சண்டையிட்டுக் கொண்ட வனிதா மற்றும் சூர்யா தேவி.!

காவல் நிலையத்தில் சரமாரியாக சண்டையிட்டுக் கொண்ட வனிதா மற்றும் சூர்யா தேவி.!

காவல் நிலையத்தில் சரமாரியாக சண்டையிட்டுக் கொண்ட வனிதா மற்றும் சூர்யா தேவி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 July 2020 11:54 AM GMT

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா கடந்த மாதம் ஜூன் 27ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இது குறித்து சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்ட பிரபலம் ஆவார். பீட்டர் பால் என்பவர் ஏற்கனவே திருமணமாகி அவருக்கு ஒரு மகன் உள்ளார் என்பதும் அவர் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதால் எலிசபெத் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அதனை அடுத்து சினிமா பிரபலங்கள் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மற்றும் தயாரிப்பாளர் ரவீந்திரன், யூடியூப் பிரபலம் சூரியா தேவி ஆகியோர் வனிதாவின் திருமணம் குறித்து கருத்துத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சூர்யா தேவி மீதும் ரவீந்திரன் மீதும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் வனிதா. அதனை அடுத்து வனிதாவின் மீது சூர்யா தேவியும் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். தற்போது, இரண்டு புகார்களையும், வடபழநி மகளிர் போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்களை சமாதானப்படுத்தும் நோக்கில் காவல்நிலையத்தில் இருவரையும் அழைத்து பேசிய போது இருவரும் சரமாரியாக சண்டையிட்டுக் கொண்டனர்.

இந்நிலையில் நடிகை வனிதா அளித்த பேட்டியில், சூர்யா தேவி மன்னிப்பு கேட்பதுடன், அந்த யு டியூப் சேனலை நிறுத்திவிட வேண்டும் என்றும் அதை செய்தால் இந்தப் பிரச்னையை முடித்துக் கொள்ளலாம். எனவே பிரச்சினை என்றும் முடிவுக்கு வராத நிலையில் பிரச்சனை நடந்து கொண்டுதான் இருக்கிறது.

Next Story