Kathir News
Begin typing your search above and press return to search.

அன்புள்ள வசுந்தரா, நீங்கள் கெஹ்லாட் குறித்து அமைதியாக இருக்கும்போது ஏன் பா.ஜ.க. வில் இருக்க வேண்டும்? - பா.ஜ.க. வினர் எரிச்சல்.!

அன்புள்ள வசுந்தரா, நீங்கள் கெஹ்லாட் குறித்து அமைதியாக இருக்கும்போது ஏன் பா.ஜ.க. வில் இருக்க வேண்டும்? - பா.ஜ.க. வினர் எரிச்சல்.!

அன்புள்ள வசுந்தரா, நீங்கள் கெஹ்லாட் குறித்து அமைதியாக இருக்கும்போது ஏன் பா.ஜ.க. வில் இருக்க வேண்டும்? - பா.ஜ.க. வினர் எரிச்சல்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 July 2020 4:52 AM GMT

ராஜஸ்தானில் நடந்து வரும் அரசியல் நெருக்கடி, ஒருவர் யூகிக்க முடியாத அளவுக்கு சிக்கலானதாக மாறிவிட்டது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோட் தனது மகனின் வளர்ச்சிக்காக கட்சியின் இளம் தலைவர் சச்சின் பைலட் ஓரங்கட்டியிலிரூந்து தொடர்கிறது இந்த அரசியல் போராட்டம். மத்திய பிரதேசத்தில் சிந்தியா பாஜகவுக்கு தாவிய பின்னர் கமல்நாத் அரசாங்கம் இழந்த மற்றொரு மத்திய பிரதேசமாக ராஜஸ்தான் மாறும் என்று பலர் நினைத்திருந்தனர்.இருப்பினும், மத்திய பிரதேசத்தில் இருந்ததைப் போல பாஜகவுக்கு நிலைமையைப் பயன்படுத்த முடியவில்லை. சச்சின் பைலட்டைக் கட்டுக்குள் வைத்திருக்க வசந்தரா ராஜே, முன்னாள் ராஜஸ்தான் முதல்வர் மற்றும் கெஹ்லோட் ஒரு அச்சை உருவாக்குவது பற்றிய வதந்திகளை ஊடக அறிக்கைகள் மூலம் நமக்குத் தெரியவருகின்றன.

அண்மையில், முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவின் நெருங்கிய உதவியாளர் என்று நம்பப்படும் பாஜக எம்எல்ஏ கைலாஷ் மேக்வால், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்ப்பது சரியானதல்ல என்று கூறினார். கெஹ்லாட் ஆட்சியை இழக்கிறது என்று தெரிந்தவுடன் ஒரு பாஜக தலைவர் அத்தகைய அறிக்கையை வெளியிடுவது மிகவும் விசித்திரமாக தெரிகிறது.

இருப்பினும், சசுலின் பைலட்டை பாஜகவில் சேர அனுமதிப்பதில் வசுந்தரா ராஜே மிகவும் அக்கறை காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இந்தியா டுடேவைப் பொறுத்தவரை, பாஜகவுக்குள் உள்ளக விவாதங்களை நன்கு அறிந்தவர்கள், நாட்டின் மிகப்பெரிய மாநிலத்தில் தற்போதைய நிகழ்வுகளின் திருப்பம் குறித்து வசுந்தரா "உற்சாகமாக இல்லை" என்று கூறுகிறார்கள்.

வசுந்தராவை பொறுத்தவரை,ஒருவேளை சச்சின் பைலட் தன் கட்சியில் வந்தால் எதிர்காலத்தில் தனது ஆட்சிக்கு சிக்கல் ஏற்படும் என்ற கருத்தில். தற்பொழுது முதல்வர் மீது ஓரளவு அனுதாபம் காட்டுவது பற்றிய ஊகங்களை ஏற்படுத்துகிறது.

ராஜஸ்தானில் இப்போது அரசியல் கலவரங்கள் நிலையில் இருந்தாலும் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே ஒரு கருத்தைக் கூட அரசுக்கு எதிராக தெரிவிக்கவில்லை என்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News