Kathir News
Begin typing your search above and press return to search.

கேரளா, கர்நாடகாவில் ஐஎஸ். தீவிரவாதிகள் நடமாட்டம்: ஐ.நாவிலிருந்து இந்தியாவிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை.!

கேரளா, கர்நாடகாவில் ஐஎஸ். தீவிரவாதிகள் நடமாட்டம்: ஐ.நாவிலிருந்து இந்தியாவிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை.!

கேரளா, கர்நாடகாவில் ஐஎஸ். தீவிரவாதிகள் நடமாட்டம்: ஐ.நாவிலிருந்து இந்தியாவிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 July 2020 9:32 AM GMT

கேரளா, கர்நாடக மாநிலத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடமாட்டம், குறிப்பிடத்தகுந்த அளவு எண்ணிக்கையில் இருப்பதாக ஐ.நா சபையின் அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ் தீவிரவாத இயக்கம்,அல்கொய்தா தீவிரவாதிகள் குறித்த ஐநாவின் தீவிரவாத கண்காணிப்பு மற்றும் தடை அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் ஆகிய நாடுகளில் 150 முதல் 200 எண்ணிக்கையிலான அல்-கொய்தா தீவிரவாதிகள் இருப்பதாகவும், பதுங்கியிருந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கை:

அல்கொய்தா தீவிரவாத அமைப்பு ஆப்கானிஸ்தானின் நிம்ருஸ், ஹெல்மாண்ட், காந்தகார் மாகாணங்களில் செயல்பட்டு வருகிறது. வங்கதேசம், இந்தியா, மியான்மர், பாகிஸ்தான் நாடுகளிலிலும் அதன் கரங்கள் விரிந்துள்ளது.

அல்கொய்தா தீவிரவாத அமைப்பின், தற்போதைய தலைவர் ஒசாமா மெகமூத், முன்னாள் அல்கொய்தா தலைவர் ஆசிம் உமர் கொல்லப்பட்டதற்கு, பழிக்கு பழி தீர்க்கும் வகையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார்.

ஐ.எஸ் அமைப்பின் இந்தியக் கிளையானது, கடந்த ௨௦௧௯ aஆம் ஆண்டு மே ௧௦ aஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், அவர்களிடம் 180 முதல் 200 உறுப்பினர்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது.

கர்நாடகா, கேரள மாநிலங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் செயல்பட்டுவருகின்றனர்.

ஐஎஸ் தீவிராவதிகள் இந்தியாவில் புதிய நிர்வாகப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம் என்று அறிவித்துள்ளனர். இந்த மாற்றம் கடந்த ஆண்டு மே மாதம் காஷ்மீரில் ராணுவத்துக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலைத் தொடர்ந்து இடம்பெற்றது.

ஐ.எஸ் தீவிரவாதிகள் குறித்து செய்தி வெளியிடும் அமாக் செய்தி ஏஜென்ஸி, தீவிராவதிகளின் புதிய கிளையின் பெயரை அரபு மொழியில் 'விலையா ஆஃப் ஹிந்த்' என்று குறிப்பிட்டுள்ளது. அப்படியென்றால் "இந்திய நிர்வாகப்பகுதி" என்று அர்த்தம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News