Kathir News
Begin typing your search above and press return to search.

நடிகர் பொன்னம்பலத்தின் சிகிச்சைக்கு உதவி செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.!

நடிகர் பொன்னம்பலத்தின் சிகிச்சைக்கு உதவி செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.!

நடிகர் பொன்னம்பலத்தின் சிகிச்சைக்கு உதவி செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 July 2020 11:48 AM GMT

நடிகர் பொன்னம்பலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசன், புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். பொன்னம்பலம் மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், மாயி, வால்டர் வெற்றிவேல், செந்தூரப்பாண்டி, முத்து, இந்தியன் ஆகிய வெற்றிப் படங்களில் வில்லனாக நடித்தவர்.

நடிகர் பொன்னம்பலம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 2 ஆகிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

தற்போது பொன்னம்பலத்துக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு சிறுநீரக கோளாறு இருந்துள்ளது. இதனை தொடர்ந்து அவரை சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.

நடிகர் கமல்ஹாசன், சரத்குமார் இருவரும் பொன்னம்பலத்துக்கு தேவையான மருத்துவ வசதிகள் செய்து கொடுத்துள்ளனர். இதன் பிறகு பொன்னம்பலத்தின் இரண்டு குழந்தையின் கல்வி செலவை உலக நாயகன் கமல்ஹாசன் ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில் பொன்னம்பலத்தின் மருத்துவ சிகிச்சைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உதவி செய்துள்ளார்.

இதைப்பற்றி பொன்னம்பலம் தரப்பிலிருந்து கூறியது: என்னுடைய இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டது. இதற்காக = சிகிச்சையில் உள்ளேன். என்னுடைய மகன், மகள் இருவரின் படிப்பு செலவை உலக நாயகன் கமல் அவர்கள் ஏற்றுக்கொண்டார். என்னுடைய சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செலவை நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் ஏற்றுக் கொண்டார் என தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News