Kathir News
Begin typing your search above and press return to search.

சித்தி சமூகத்திற்கு அங்கீகாரம் - இந்தியாவிலேயே முதல் முறையாக சித்தி சமூக சாந்தாராம சித்தியை மேலவை உறுப்பினராக்கிய பா.ஜ.க!

சித்தி சமூகத்திற்கு அங்கீகாரம் - இந்தியாவிலேயே முதல் முறையாக சித்தி சமூக சாந்தாராம சித்தியை மேலவை உறுப்பினராக்கிய பா.ஜ.க!

சித்தி சமூகத்திற்கு அங்கீகாரம் - இந்தியாவிலேயே முதல் முறையாக சித்தி சமூக சாந்தாராம சித்தியை மேலவை உறுப்பினராக்கிய பா.ஜ.க!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 July 2020 3:41 AM GMT

400 ஆண்டுகளுக்கு முன்பு போர்த்துக்கீசிய வணிகர்களால் அடிமைகளாக இந்தியா அழைத்து வரப்பட்டு இங்கேயே குடியேறிய சித்தி பழங்குடியின சமூகத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாக சாந்தாராம சித்தி, எட்டியூரப்பா தலைமையிலான கர்நாடக அரசால் மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்கிழக்கு ஆப்பிரிக்க பகுதியைச் சேர்ந்த பண்டு மொழி பேசும் பழங்குடியினரின் வழித்தோன்றல்களான சித்திகள் கர்நாடக மாநிலத்தின் வட பகுதியில் வசிக்கின்றனர். 50,000 பேரைக் கொண்ட இந்த சமூகத்திற்கு சாந்தாராம சித்திக்கு கிடைத்திருக்கும் இந்த பதவி அங்கீகாரத்தை அளித்துள்ளது.

பெரும்பாலும் காடுகளில் வாழ்ந்து கூலித் தொழிலாளர்களாகவும் தோட்டத் தொழிலாளர்களாகவும் பணிபுரியும் சித்தி சமூகத்தினரை கர்நாடக மாநில அரசு பழங்குடியினமாக அங்கீகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சித்தி பாஷா என்ற தங்களது பழங்குடியின மொழியையே இவர்கள் இன்னும் பயன்படுத்தி வந்தாலும் பல நூற்றாண்டுகளாக கர்நாடகத்தில் வாழ்வதால் கன்னட மொழியையும் சரளமாகப் பேசுவார்கள்.

கடந்த 1989-ல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஒரு அங்கமான வனவாசி கல்யாண ஆஸ்ரமத்தின் சேவகராகச் சேர்ந்த சாந்தாராம சித்தி, விடுதிப் காப்பாளராகத் தனது பணியைத் தொடங்கி தற்போது இந்த அமைப்பின் செயலாளராகவும் முக்கிய பிரமுகராகவும் உள்ளார். சித்தி சமூகத்தில் முதன் முதலாக பட்டம் பெற்றவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story