Kathir News
Begin typing your search above and press return to search.

"இப்தார் விழாவில் கலந்து கொள்வது தான் மதச் சார்பின்மையா?" ஒவைசியைக் கேள்விகளால் துளைத்தெடுத்த நெட்டிசன்கள்.!

"இப்தார் விழாவில் கலந்து கொள்வது தான் மதச் சார்பின்மையா?" ஒவைசியைக் கேள்விகளால் துளைத்தெடுத்த நெட்டிசன்கள்.!

இப்தார் விழாவில் கலந்து கொள்வது தான் மதச் சார்பின்மையா? ஒவைசியைக் கேள்விகளால் துளைத்தெடுத்த நெட்டிசன்கள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 July 2020 10:20 AM GMT

ஆகஸ்ட் 5ல் நடத்தப்படும் பூமி பூஜையில் பா.ஜ.க தலைவர் L K அத்வானி, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முதலியோருடன் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என்று எதிர்ப்பாக்கப் படுகின்றது. அதில் அவர் 40 கிலோ வெள்ளி செங்கல்லைக் கட்டுமான பகுதியில் வைப்பாரென்று கூறப்படுகிறது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த AIMIM இன் நாடாளுமன்ற உறுப்பினர் அசதுதீன் ஒவைசி,பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவிலின் பூமி பூஜையில் பங்கேற்பது சட்டத்தின் சத்தியத்திற்குப் புறம்பானது என்று தனது எதிர்ப்பை ட்வீட்டில் வெளிப்படுத்தியதையடுத்து அவரது கருத்துக்கு டிவிட்டரில் பல எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

தனது ட்வீட்டில் "பூமி பூஜையில் அதிகாரபூர்வமாக கலந்துகொள்வது @PMOIndia சட்டத்தின் சத்தியத்திற்குப் புறம்பானது. மதச்சார்பின்மை சட்டத்தின் அடிப்படை அமைப்பாகும்" என்று கூறியிருந்தார்.



பிரதமர் பூமி பூஜையில் கலந்துகொள்வது மதச்சார்பின்மைக்கு எதிரானது என்று வாதிடும் ஒவைசியின் வாதத்திற்குப் பல நெட்டிசன்கள், இப்தார் விழாக்களில் கலந்து கொள்ளும் கட்சியினர் இருக்கும் போது, ராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் பங்கேற்பதை எதிர்ப்பதா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.



"மதச்சார்பின்மை, சட்டத்தின் அடிப்படை அமைப்பாகும்" கூறுவது யாரென்றால் மதத்தின் அடிப்படையில் சட்டங்களை விரும்பும் ஒரு இஸ்லாமியவாதி என்று கலாய்த்தனர்.

source: https://swarajyamag.com/insta/attending-iftar-party-is-secular-netizens-ask-owaisi-as-he-questions-pm-modis-plan-to-attend-bhoomi-pujan

Next Story