Kathir News
Begin typing your search above and press return to search.

என்னிடம் உள்ள மைனஸ்களை நீக்கி உயரத்துக்கு கொண்டு சென்றவர் இயக்குனர் சிகரம் - பாலச்சந்தர் பிறந்த நாளில் மனம் திறந்த ரஜினி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 July 2020 9:28 AM GMT

தமிழ் சினிமாவின் இயக்குனர் சிகரம் என்று ரசிகர்களாலும் சினிமா துறையினராலும் கொண்டாடப்பட்ட கே.பாலச்சந்தரின் 90 வது பிறந்த நாள் இன்று.

இந்நிலையில் அவரைப்பற்றிய நினைவுகளை சில நிமிடம் பகிர்ந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில் " கே.பாலச்சந்தர் அவர்கள் என்னை அவருடைய படத்தில் தமிழ் திரையுலகில் அறிமுகப்படுத்தவில்லை என்றால் நான் ஒரு சின்னஞ்சிறிய நடிகனாகவோ அல்லது ஒரு வில்லன் நடிகனாகவோ திரையுலகின் ஒரு மூலையில் இருந்திருப்பேன்.

பாலச்சந்தர் சாரால்தான் நான் உண்மையில் மிகப்பெரிய இடத்தை அடைய முடிந்தது, என்னிடமிருந்த பலகீனங்களை எல்லாம் அவ்வப்போது கண்டு கொண்ட அவர் அவற்றை சரிபடுத்தி, நல்ல பாத்திரங்களை கொடுத்து நல்ல கலைஞனாகவும் , நல்ல இடத்தையும் தந்து வாழ்க்கையில் என்னை உயர்ந்த இடத்துக்கு கொண்டு வந்தார். என்று மிகுந்த நெகிழ்ச்சியுடன் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில் " இத்தனை ஆண்டு சினிமா வாழ்க்கையில் பல இயக்குனர்களுடன் நான் பணியாற்றி இருந்தாலும், படப்பிடிப்பு தளத்தில் பாலச்சந்தர் அவர்கள் வரும்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தும் அளவுக்கு அவரிடம் ஒரு கம்பீரம் இருந்ததாக கூறினார். அவருடைய ஆன்மா எங்கு இருந்தாலும் அந்த ஆன்மா அமைதியாக, நிம்மதியாக இருக்க நான் விரும்புகிறேன் என்றார் ரஜினிகாந்த்.

Next Story