Kathir News
Begin typing your search above and press return to search.

இவ்வளவு தான் இவங்க அக்கறை, தி.மு.க நடத்திய போட்டோஷாப் போராட்டம் - கிழித்து தொங்கவிடும் நெட்டிசென்கள்.!

இவ்வளவு தான் இவங்க அக்கறை, தி.மு.க நடத்திய போட்டோஷாப் போராட்டம் - கிழித்து தொங்கவிடும் நெட்டிசென்கள்.!

இவ்வளவு தான் இவங்க அக்கறை, தி.மு.க நடத்திய போட்டோஷாப் போராட்டம் - கிழித்து தொங்கவிடும் நெட்டிசென்கள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 July 2020 8:00 AM GMT

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டசபைத் தேர்தலுக்குத் தயாராகும் விதமாக தி.மு.க நடத்தி வரும் நாடகங்கள் உடனடியாக தோலுரித்துக் காட்டப்பட்டாலும் பிரஷாந்த் கிஷோரிடம் ஐடியாக்களுக்கு பஞ்சமே இல்லை போலும்.

கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த காலகட்டத்தில் அரசு முறையாக செயல்படாததால் தான் தாங்கள் களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டி இருக்கிறது என்று அலுத்துக் கொண்டார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். ஆனால், வைரஸுக்கு அஞ்சாமல் கொள்கை தான் முக்கியம்‌ என்று இரண்டாம் நிலை தலைவர்களும் தொண்டர்களும் மட்டும்‌ தான் நினைக்கிறார்கள் போல.

கொரோனா நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த தி.மு.க எம்எல்ஏ அன்பழகன் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்க நேரிட்டும் தி.மு.க பல்வேறு விஷயங்களுக்கும் போராட்டங்களை நடத்திக் கொண்டு தான் இருக்கிறது. உயர்நீதி மன்றமே மின்கட்டணம் கணக்கிடப்படும் முறையில் தவறு‌ இருப்பதாகத் தெரியவில்லை என்று கூறிய பிறகும் அதை எதிரத்தும் சலுகை கோரியும் போராட்டங்களை ஏற்பாடு செய்தது.

கையில் பதாகையைப் பிடித்துக் கொண்டு மு.க.ஸ்டாலினும் பிற தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் தங்களது வீடுகளின் முன் போராட்டம் செய்தனர். நீலகிரி மக்களவைத் தொகுதி எம்பி ஆ.ராசாவும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதைப் போல் ஒரு புகைப்படம் முகநூலில் வெளியிடப்பட்டது. இந்த புகைப்படம் கடந்த ஜூன் 30ம் தேதி, அதாவது 21 நாட்களுக்கு முன் சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் நீதிமன்றக் காவலில் இறந்த சம்பவத்தில் கொலையாளிகளைக் கைது செய்யக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது வெளியிடப்பட்ட படத்தின் நகலாக இருப்பது தான் இப்போது‌ நெட்டிசன்கள் தி.மு.கவைக் கலாய்க்க கிடைத்துள்ள புதிய காரணம்.

முன்னர் வெளியிட்ட அதே புகைப்படத்தில் பதாகையை மட்டும் ஃபோட்டோஷாப் செய்து வெளியிட்டுள்ளனர். ஏதோ தமிழகத்தையே தாங்கள் தான் காப்பாற்றுவது போலப் பேசும் தி.மு.கவினர் வீட்டிலிருந்தபடி நடத்தும் போராட்டத்தில் கூட பங்கேற்காத அளவுக்குத் தான் அவர்களது அக்கறை இருக்கிறது. இந்த புகைப்படங்களை வைத்து 'எங்கே குறைந்தபட்சம் ஆறு வித்தியாசங்களைக் கண்டுபிடிங்க பாப்போம்' என்று நக்கலடித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News