Kathir News
Begin typing your search above and press return to search.

நடிகை வனிதா தஞ்சை மக்கள் குறித்து அவதூறாக பரப்பியதற்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு.!

நடிகை வனிதா தஞ்சை மக்கள் குறித்து அவதூறாக பரப்பியதற்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு.!

நடிகை வனிதா தஞ்சை மக்கள் குறித்து அவதூறாக பரப்பியதற்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 July 2020 10:55 AM GMT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜயகுமாரின் மகளான நடிகை வனிதா தற்போது பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். ஜூன் 27 ஆம் தேதி அன்று நடந்த திருமணம் முடிந்தது.

பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் தன்னிடம் விவாகரத்து பெறாமலேயே இத்திருமணம் நடைபெற்றதாக போலீசில் புகார் அளித்தார்.

இதை அடுத்து எலிசபெத் ஹெலனுக்கு ஆதரவாக சூர்யா தேவி என்ற பெண் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து வனிதாக்கு எதிராக பல ஆபாசமான கருத்துக்களையும், திட்டியும் பதிவிட்டு வந்தார். மேலும் இதைப் பார்த்த வனிதா சூரியா தேவியின் மேல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதனை எடுத்தும் சூர்யா தேவி வனிதாவின் மீதும் புகார் அளித்தார்.

இதனையடுத்து காவல் நிலையத்தில் சில நாட்களுக்கு முன்னர் வனிதா, சூர்யா தேவி இருவரையும் காவல்நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

தற்போது நடிகை வனிதா வீடியோ ஒன்றில் தஞ்சை மக்களைக் குறித்து அவதூறாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்த வீடியோவில் நான் தஞ்சாவூர் என்றும் இங்கு இரண்டு திருமணங்கள் செய்து கொள்வது இயல்பு என்று தெரிவித்திருக்கிறார் மேலும் என்னுடைய அப்பா விஜயகுமார் இரண்டு திருமணங்கள் செய்து கொண்டார்.

மேலும் இவர் தஞ்சாவூரில் எந்த வீட்டில் பார்த்தாலும் இரண்டு திருமணம் செய்தவர்கள் தான் இருப்பார்கள் என்று அந்த ஊரில் அதுதான் வழக்கம் என்றும் இது தவறு இல்லை என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் இவர் நேரடியாக தஞ்சாவூருக்கு வந்து ஒவ்வொரு வீட்டிலும் கணக்கெடுத்து அதுபோல் கூறியிருப்பது தஞ்சாவூர் மக்களின் மனதை பெரிதும் பாதித்துள்ளது.

இதையடுத்து சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோக்கள் பரவத் தொடங்கியதும் பாஜக கட்சியினர் பட்டுக்கோட்டையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மேலும் இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைவரும் வீட்டில் பார்த்தால் இரு திருமணங்கள் செய்து இருப்பார்கள் என்று அவதூறாகப் பேசி இருக்கிறார் எனவே இவர் மேல் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News