Kathir News
Begin typing your search above and press return to search.

கேரள தங்க கடத்தல் வழக்கு : முதல்வர் விஜயன் தன்னை காப்பாற்ற மற்ற அதிகாரிகளை பலிகடாவாக பயன்படுத்துகிறாரா?

கேரள தங்க கடத்தல் வழக்கு : முதல்வர் விஜயன் தன்னை காப்பாற்ற மற்ற அதிகாரிகளை பலிகடாவாக பயன்படுத்துகிறாரா?

கேரள தங்க கடத்தல் வழக்கு : முதல்வர் விஜயன் தன்னை காப்பாற்ற மற்ற அதிகாரிகளை பலிகடாவாக பயன்படுத்துகிறாரா?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 July 2020 2:19 PM GMT

கேரளாவின் தங்க கடத்தல் விவகாரம் கேரளாவில் கொரானவை விட உலுக்கி வருகிறது தற்பொழுது அதன் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளது ௭ன்.ஐ.ஏ ஆரம்பத்தில். சுங்க அதிகாரிகள் 30 கிலோகிராம் தங்கத்தை பறிமுதல் செய்ததாக வெளியான தகவல்களுடன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைத் தூதரகத்தில் ஒரு நபரிடம் சரக்குகளிலிருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை எடுத்து வந்ததாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைத் தூதரக ஊழியர்களான சரித் குமார் மற்றும் ஸ்வப்னா சுரேஷா ஆகியோர் தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐ.ஏ.௭ஸ் சிவசங்கருக்கும் தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையிலான உறவின் குற்றச்சாட்டுகள் கேரள முதல்வர் விஜயனுக்கு அரசியல் தொல்லைகளை ஏற்படுத்தியுள்ளன. அரசியல் குற்றச்சாட்டுகள் பலிகடாவதற்கு முதலில், சிவசங்கர் நீக்கப்பட்டார், இப்போது சிவசங்கரின் நம்பகமான அருண் பாலச்சந்திரனும் கேரள அரசால் நீக்கப்பட்டார். கேரள ஐ.டி துறையின் மற்றொரு முக்கிய முகமாக பாலச்சந்திரன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்வப்னா சுரேஷின் கணவர் ஜெயசங்கருக்கு வாடகைக்கு வீடு கிடைக்க உதவியதாக பாலச்சந்திரனின் பெயர் சிக்கியதால் அவரும் இந்த மோசடியில் கூட்டணி வைத்திருப்பார் என்ற ரீதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், சிவசங்கர் தான் ஜெயசங்கருக்கு உதவி செய்ய வலியுறுத்தியதாக அருண் குற்றம் சாட்டுகிறார். உண்மையில், அவருக்கும் சிவசங்கருக்கும் இடையிலான உரையாடலின் ஸ்கிரீன்ஷாட்கள் ஊடகங்களுக்கு ரகசியமாக கிடைத்தது.

கேரள முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் ஸ்வப்னாவை சில காலமாக அறிந்திருந்தார் என்றும், இப்போது முன்னாள் தகவல் தொழில்நுட்ப செயலாளர் அருண் பாலச்சந்திரனிடமிருந்து பொறுப்பை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பாலச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.அருண் கூறிய குற்றச்சாட்டுகள் கேரள முதல்வருக்கு மேலும் தொல்லையை அதிகப்படுத்துகின்றன. முதல்வர் மற்றும் முதல்வரின் முதன்மை செயலாளர் எம்.சிவசங்கருடன் ஸ்வப்னாவின் படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன இதனால் முதல்வருக்கும் இதில் பங்கு இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருகிறது. அதற்கான தீர்மானத்தை காங்கிரஸ் எம்.எல்.ஏ வி.டி.சதீசன் இன்று நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

இந்த கடத்தல் வழக்கில் முதல்வா் பினராயி விஜயனின் பங்கும் இதில் இருக்கிறது என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த சூழ்நிலைகளில்தான் அருண் பாலச்சந்திரனின் குற்றச்சாட்டுகள் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கேரள முதல்வருக்கு நெருக்கமாகக் இருந்த ஒரு உயர் ஐ.ஏ.எஸ் அதிகாரியை மீட்பதற்காக மற்ற அதிகாரிகளை பலியாடாக ஆக்குவதற்கு முயற்சித்து வருவதாக முதல்வர் மீது குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதன்மூலம் தங்க கடத்தல் வழக்கில் கேரள முதல்வருக்கு மிகப்பெரிய பின்னடைவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News