Kathir News
Begin typing your search above and press return to search.

நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் கைது.!

நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் கைது.!

நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் கைது.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 July 2020 5:56 AM GMT

நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று இரவு காவல்துறை உதவி எண் 100க்கு போன் செய்த மர்ம நபர் சாலிகிராமத்தில் உள்ள விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக தெரிவித்து விட்டு இணைப்பைத் துண்டித்து விட்டுள்ளான்.

இதன் பிறகு நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தியதில் வெடிகுண்டு வைக்கப்பட்டது புரளி என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து மிரட்டல் விடுத்து அந்த மர்ம நபரின் தொலைபேசி எண்ணை விசாரணை செய்ததில் அந்த மர்ம நபர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த புவனேஷ் என்பது தெரியவந்துள்ளது.

பிறகு காவல் துறையினர்புவனேஷை கைது செய்து உள்ளனர். ஆனால், புவனேஷ் மனவளர்ச்சி சரியில்லாதவர் என கூறப்படுகிறது. மேலும், நடிகர் விஜய் வசித்து கொண்டிருக்கும் நீலாங்கரை வீட்டில் காவல்துறையை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News