Kathir News
Begin typing your search above and press return to search.

மறைந்த தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனின் பதவியை பிடிப்பதற்கு போட்டி போட்டுக் கொள்ளும் மகன் - தம்பி - ஸ்டாலினின் முடிவு என்ன?

மறைந்த தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனின் பதவியை பிடிப்பதற்கு போட்டி போட்டுக் கொள்ளும் மகன் - தம்பி - ஸ்டாலினின் முடிவு என்ன?

மறைந்த தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனின் பதவியை பிடிப்பதற்கு போட்டி போட்டுக் கொள்ளும் மகன் - தம்பி - ஸ்டாலினின் முடிவு என்ன?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 July 2020 1:36 PM GMT

மறைந்த சேப்பாக்கம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினரும் மற்றும் சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் ஜெ.அன்பழகன். இவருடைய தந்தை பழக்கடை ஜெயராமன். இவர் தி.மு.க-வில் பகுதி செயலாளராக இருந்து படிப்படியாக தி.மு.க-வின் மாவட்ட செயலராக பதவியில் இருந்தவர். தி.மு.க மீது கொண்ட பற்றால் இவருடைய மகனுக்கு அன்பழகன், கருணாநிதி என பெயர் சூட்டினார்.

ஜெ.அன்பழகன் தி.மு.க-வில் மிக முக்கியமானவர். இவர் சமீபத்தில் தான் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிக்சை பலன் இன்றி உயிரிழந்தார். தற்போது இவர் எம்.எல்.ஏ-வாக இருந்த தொகுதியும் மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் பதவியும் காலியாக உள்ளது.

இந்நிலையில் அன்பழகனின் தம்பி ஜெ.கருணாநிதிக்கும் மற்றும் அன்பழகனின் மகன் ராஜா அன்பழகனுக்கும் அவருடைய இடத்தை பிடிப்பதற்கு போட்டி ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. சித்தப்பா - மகன் இடையே பதிவு போட்டி நிலவி வருகிறது.


ஜெ.கருணாநிதி தற்போது தியாகராய நகர் கிழக்கு பகுதி செயலாளராக பதிவியில் இருக்கிறார். இவர் தியாகராய நகர் முன்னாள் கவுன்சிலர் ஆக இருந்தவர். இவர் அண்ணன் இடத்துக்கு வர வேண்டும் என எதிர்பார்க்கிறார்.

ஜெ.அன்பழகனின் மகன் ராஜா அன்பழகன் இவர் தி.மு.க-வில் எந்த பொறுப்பிலும் இல்லாமல் இருக்கிறார். ஆனால், இவர் தந்தையின் இடத்துக்கு வர வேண்டும் என எதிர்பார்த்து உள்ளார் என கூறப்படுகிறது.

ஜெ.அன்பழகன் இருந்த பொறுப்பில் இந்த இருவரில் யாரை அமர்த்துவர் அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் என கேள்விகள் எழுந்து வருகிறது என தகவல் கூறப்படுகிறது.

Next Story