Kathir News
Begin typing your search above and press return to search.

சூர்யாவின் அடுத்த படம் "வாடிவாசல்" அதும் இரட்டை வேடத்தில்?

சூர்யாவின் அடுத்த படம் "வாடிவாசல்" அதும் இரட்டை வேடத்தில்?

சூர்யாவின் அடுத்த படம் வாடிவாசல் அதும் இரட்டை வேடத்தில்?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 July 2020 8:22 AM GMT

சூர்யாவின் படங்கள் தற்போது வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் கொஞ்சம் தளர்வு ஏற்பட்டு வருகிறது. காலகட்டத்தில் சூர்யாவின் படம் அடுத்தடுத்து வந்து ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது.

ஆனால் இப்போது அப்படி இல்லை.

அதை வலுப்படுத்தவே வலுவான கூட்டணியை அமைத்து வருகிறார் சூர்யா. முன்னதாக ஹரி இயக்கத்தில் அருவா என்ற படத்தில் நடிப்பதாக வெளிவந்தது. தற்போது அருவா படத்தை ஓரங்கட்டிவிட்டு வாடிவாசல் என்ற படத்தை கையில் எடுத்துள்ளார்.

கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் இத்திரைப்படம் வாடிவாசல். இப்படத்தில் இவர் இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகள் ஏதும் வராத நிலையில் வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கப் போவது என்பது மட்டும் உறுதியாகின்றன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News