Kathir News
Begin typing your search above and press return to search.

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பொலிவு பெற்ற இரண்டு கோவை குளங்கள்: டெல்லி அதிகாரிகள் மனமுவந்து பாராட்டு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 July 2020 2:08 PM GMT

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகரில் மேம்பாலப் பணிகள், சீரமைப்பு பணிகள் என பல்வேறு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், கோவை உக்கடம் பெரிய குளம் ரூ.39.84 கோடியில் சுமார் 1.30 கி.மீ. வரை பொலிவூட்டும் பணிகள் நடந்து வருகிறது. அதில், 600 மீட்டர் தூரத்திற்கான பணிகள் நிறைவடைந்து விட்டன.

அதேபோல, வாலாங்குளத்தில் மேம்பாலத்தின் கீழ் ரூ. 23,83 கோடியிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த இரு குளங்களையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் காணொளி காட்சியின் மூலம் திறந்து வைத்தார்.

அவர் திறந்து வைத்த அன்றிரவே வண்ண விளக்குகள் மற்றும் பலூன்களால் இந்த குளக்கரைகள் ஜொலித்தன. இதனை ஏராளமான மக்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வைரலாக்கினர்.

இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கவனத்திற்கு கோவை மாநகராட்சி அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

இதனை பார்த்த அந்தத் துறையின் செயலர் துர்கான சங்கர் மிஸ்ரா, தனது டுவிட்டர் பக்கத்தில், அந்தப் புகைப்படங்களை பகிர்ந்து, பாராட்டு தெரிவித்துள்ளார்.

Next Story