Kathir News
Begin typing your search above and press return to search.

மூக்குடைந்த சீனா - மூன்று பகுதிகளில் இருந்தும் முழுவதுமாக பின்வாங்கியது : கல்வான் உரிமை பற்றி அஜித்தோவல் இன்று நுணுக்கமான பேச்சு வார்த்தை.!

மூக்குடைந்த சீனா - மூன்று பகுதிகளில் இருந்தும் முழுவதுமாக பின்வாங்கியது : கல்வான் உரிமை பற்றி அஜித்தோவல் இன்று நுணுக்கமான பேச்சு வார்த்தை.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 July 2020 2:16 AM GMT

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரதமர் மோடியுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு சீன வெளியுறவு மந்திரி வாங் யியுடன் இரண்டு மணிநேர நீண்ட சந்திப்பை நடத்தினார். அதில் இருந்து கடந்த 3 நாட்களாக சீன ராணுவம் உடனடியாக பின்வாங்க ஒப்புக்கொண்டது மட்டுமல்லாமல் அதன்படி தற்போது நடைபெற்று வருகிறது.

அந்த சந்திப்பில் இரு தரப்பினரும் பொது எல்லை கோட்டை கண்டிப்பாக மதிக்க வேண்டும் மற்றும் கடைபிடிக்க வேண்டும் என்றும், ஒருதலைப்பட்ச நடவடிக்கையை எடுக்கக்கூடாது என்றும், எல்லைப் பகுதிகளில் அமைதி மற்றும் நிலைத் தன்மையை குலைக்கும் எந்தவொரு சம்பவத்தையும் எதிர்காலத்தில் தவிர்க்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டனர். மேலும் சில பேச்சு வார்த்தைகளும் நடைபெற்றன.

இதை அடுத்து, லடாக்கில் உள்ள எல்லைப்பகுதியில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே வீரர்களை திரும்பப் பெறும் செயல்முறை கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சீன துருப்புக்கள் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் திரும்பிச் சென்றன. ஹாட் ஸ்பிரிங்ஸில் ரோந்து புள்ளி 17'இல் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான படைகளின் பின்வாங்கல் முழுவதுமாக முடிந்தது.

இதன் மூலம், ரோந்து புள்ளி -14, 15 மற்றும் 17 ஆகியவற்றில் சீன வீரர்கள் முழுமையாக பின்வாங்கியுள்ளனர். மேலும் ஃபிங்கர் பகுதியில் சீன இராணுவ வீரர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து வருவதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

சீன துருப்புக்கள் பரஸ்பர பின்வாங்கல் ஒப்பந்தத்தின் கீழ் ரோந்து புள்ளி-14,15 மற்றும் 17 மற்றும் 17 ஏ பகுதிகளில் உள்ள சர்ச்சைக்குரிய இடங்களிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் திரும்பிச் சென்று விட்டன. அதாவது அவர்கள் சென்ற ஏப்ரல் மாதம் எங்கிருந்தார்களோ அந்த பழைய இடத்துக்கு சென்றுவிட்டனர்.

இந்திய இராணுவமும் மேற்கண்ட பகுதிகளிலிருந்து அதே போல மீண்டும் தங்கள் முந்தைய முகாம்களுக்கு திரும்பி வந்து விட்டன.

இதற்கு முன்னர் இந்தியாவின் ரோந்துப் புள்ளிக்கு வெகு அருகாமையிலே சீனர்கள் வேண்டுமென்றே தங்கள் கட்டமைப்பை உருவாக்க முனைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தடுக்கப் போன இந்தியாவுடன் மோதித்தான் சீனா தனது சமீபத்திய வரலாற்றில் இன்று முதன் முதலாக மூக்குடைந்து போய் நிற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் இந்த நடவடிக்கைக்கு காரணம் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவைப்போல தங்களுக்கும் உரிமை உண்டு என்பதை காட்டத்தான். ஆனால் இந்தியா அதை திட்டவட்டமாக மறுத்து வருகிறது. அஜித் தோவல் உடன் பேச்சுவார்த்தைக்கு முன்பாக கல்வான் விஷயத்தில் உறுதிப்படுத்தினால் மட்டுமே படைகள் பின்வாங்கும் என சீனா பிடிவாதம் பிடித்தது. ஆனால் படைகளை மறுபடியும் 2020 ஏப்ரல் நிலைக்கு கொண்டு சென்றால்தான் கல்வான் பற்றி பிறகு பேசலாம் என இந்தியா கூறியதாக தெரிகிறது.

இன்று அதைப்பற்றிய பேச்சு வார்த்தையை நடத்தவுள்ளனர் என கூறப்படுகிறது. காஷ்மீர் எப்படி இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என அழுத்தம் திருத்தமாக இந்தியா கூறி வருகிறதோ அதே போல கல்வான் பகுதியையும் அவ்வாறே இந்தியா கூறும் நிலையில் இனி நடக்கவுள்ள பேச்சு வார்த்தைகள் முக்கிய கட்டம் உடையவை என கூறப்படுகிறது.

https://economictimes.indiatimes.com/news/defence/defence-news-latest-updates-live-july-9/liveblog/76865019.cms#:~:text=China's People's

Next Story
கதிர் தொகுப்பு
Trending News