Kathir News
Begin typing your search above and press return to search.

விவேகானந்தரை ஆன்மீக அறிவுச்சூரியன் என அழைத்தது அமெரிக்கா? ஏன் ?

விவேகானந்தரை ஆன்மீக அறிவுச்சூரியன் என அழைத்தது அமெரிக்கா? ஏன் ?

விவேகானந்தரை ஆன்மீக அறிவுச்சூரியன் என அழைத்தது அமெரிக்கா? ஏன் ?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 July 2020 2:29 AM GMT

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ பேச்சு அவரது குருவான ஸ்ரீ ராமகிருஷ்ணரின் கனவுகளை அப்படியே பிரதிபலித்தது. சமூகத்தில் அதர்மம் பெருகி, மக்கள் உண்மையை புறம்தள்ளி அநீதிக்கு கட்டுண்டு, நெறி தவறி வாழும் பொது இறைவனே மனித ரூபத்தில் வந்து மக்களுக்கு நேர் வழியை காண்பிக்கிறார். ஸ்ரீ ராமகிருஷ்ணர் அப்படி ஒரு அவதாரமே.

ஸ்ரீ ராமகிருஷ்ணர் இந்தியாவில் அவதரித்த காலகட்டம் இந்த தேசமே பெரும் இருளில் மூழ்கியிருந்த கால கட்டம், இந்துக்கள் "பிரெஞ்சு நாடு அறிஞர் பிரான்சீஸ் கோதே சொன்னது போல் இந்துக்கள் அறிவாளிகளாக இருந்தும் தங்களை தாங்களே தாழ்வாக எண்ணி கொண்டு வலிமை அற்று தங்கள் கலாச்சாரத்தை தங்கள் மதத்தை தாங்களே இழிவாக பார்த்த காலம்.

அந்த காலகட்டத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணரை போல் நிறைய துறவிகள் இருந்தாலும், அவருக்கு கிடைத்த சீடர் போல் வேறு எவருக்கும் கிடைக்க வில்லை. நரேந்திரநாத் தத்தா என்ற இளைஞனே பின்னாளில் சுவாமி விவேகாந்தன்தார் என்ற பெயரோடு உலகம் முழுவதும் ராமகிருஷ்ணரின் கருத்துக்களை பரப்பினார். சுவாமி விவேகானந்தர் தன்னுடைய ஆங்கில புலமையாலும், சமூக வரலாற்று அறிவியல் அறிவாலும், ஹிந்து சனாதன தர்மத்தை அமெரிக்காவில் ஆரம்பித்து உலகம் எங்கும் பரப்பினார்.

மேற்கத்திய உலகம் அதுவரை அப்படி ஒரு துறவியை பார்த்ததில்லை. இந்திய என்றாலே வேறு விதமான பிம்பத்தை மனதில் நினைத்திருந்த அவர்களுக்கு ர் இந்தியர் அதுவும் ஒரு துறவி சரளமான ஆங்கிலத்தில் தத்துவம், பைபிள், இலக்கியம், தர்க்கம், என்று மேடைதோறும் பேசியது அமெரிக்கா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அன்றைக்கு அமெரிக்காவின் பிரபல பத்திரிகைகள் அவரை "அறிவுச் சூரியன்" என்றும் " நம் நாட்டின் ஒட்டுமொத்த பேராசிரியர்களின் அறிவை சேர்த்து கூட்டினாலும் இந்த மனிதன் முன்பு தோற்று போகும்" என்றும் புகழாரம் சூட்டியது.

சுவாமி விவேகானந்தர் அப்படி பேசியதெல்லாம் என்ன ? இந்திய தேசத்தின் சனாதன தர்மத்தையும் அதன் பெருமையும் தான். அவரது பேச்சுக்கள் தலைமுறைகளை தாண்டி தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது, சுவாமி விவேகானந்தருக்கு அடுத்த வந்த தலை முறையில் அரபீந்தர், சுபாஷ் போஸ் , புரட்சியாளர்கள் சந்திரசேகர ஆசாத், ரேம் பிரசாத் பீஷ்மால் போன்ற சுதந்திர போராட்ட வீரர்கள் உருவானார்கள், அவர்கள் அதனை பெரும் விவேகானந்தரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர்கள். சுவாமி விவேகானந்தர் மூலம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பரமஹம்சரே இந்தியாவில் இத்தகைய சமூக மற்றும் ஆன்மீக எழுப்புதலை ஏற்படுத்தி இருக்கிறார். சுவாமி விவேகானந்தரே ஒரு முறை சொல்லும்போது " என் பேச்சில் ஏதாவது குற்றம் இருந்தால் அது என்னை சேரும், அதில் பாராட்டப்பட வேண்டிய ஏதாவது இருந்தால் அது என் குருநாதரியே சேரும் " என்றிருக்கிறார். ஶ்ரீ

Next Story
கதிர் தொகுப்பு
Trending News