Kathir News
Begin typing your search above and press return to search.

இ-பாஸ் வெளியிட்ட ரஜினிகாந்த்! மூலபத்திரம், உதயநிதி சாத்தான்குளம் இ-பாஸ் கேட்கும் நெட்டிசன்கள்!

இ-பாஸ் வெளியிட்ட ரஜினிகாந்த்! மூலபத்திரம், உதயநிதி சாத்தான்குளம் இ-பாஸ் கேட்கும் நெட்டிசன்கள்!

இ-பாஸ் வெளியிட்ட ரஜினிகாந்த்! மூலபத்திரம், உதயநிதி சாத்தான்குளம் இ-பாஸ் கேட்கும் நெட்டிசன்கள்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 July 2020 11:59 AM GMT

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 3 நாட்களுக்கு முன் சென்னையில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள தனது மகள் வீட்டுக்குச் சென்று வந்தார்.

அதற்கு அவர் இ-பாஸ் பெற்றிருந்தாரா எனக் கேள்வி எழுந்தது. அது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், இ-பாஸ் பெறாமல் சென்றிருந்தால் அது குறித்துக் காவல் நிலையத்துக்குத் தெரிவிக்கப்படும் எனச் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார். இதை அரசியலாக்கவும், விவாதமாக்கவும் சிலர் முயன்றனர்.

இதனிடையே சென்னையில் இருந்து கேளம்பாக்கத்துக்குச் இன்று செல்வதற்கு நடிகர் ரஜினிகாந்த் எடுத்த இ-பாஸ் சமூக வலைத்தளத்தில் பரவியுள்ளது. கேள்வி எழுப்பிய அனைவரின் வாயையும் மூட சொல்லி ரஜினியின் ரசிகர்கள் வலைதளத்தில் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

சிலர் உதயநிதி சாத்தான்குளம் சென்று வந்த இ-பாஸை கேட்டு வருகின்றனர். மேலும் சிலர் மூலபத்திரமே இன்னும் வரலை என நியாபகப்படுத்துகின்றனர். இதனால் பதில் சொல்ல முடியாமல் வாய் மூடியுள்ளனர் தி.மு.க ஆதரவாளர்கள்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News