Kathir News
Begin typing your search above and press return to search.

டாக்டர் அப்துல் கலாம் ஐயா அவர்களுக்கு உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் நடிகர் விவேக்.!

டாக்டர் அப்துல் கலாம் ஐயா அவர்களுக்கு உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் நடிகர் விவேக்.!

டாக்டர் அப்துல் கலாம் ஐயா அவர்களுக்கு உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் நடிகர் விவேக்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 July 2020 8:05 AM GMT

அப்துல் கலாம் ஐயாவின் நினைவு நாளை முன்னிட்டு நடிகர் விவேக் ட்விட்டரில் ஒரு பதிவை பதிவிட்டிருக்கிறார். மேலும் முன்னாள் குடியரசு தலைவரும் விஞ்ஞானியுமான அப்துல்கலாம் 2005 ஆம் ஆண்டு மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்திருக்கும் பொழுது மயங்கி விழுந்தார். அங்கேயே அவர் காலமானார்.

மேலும் இவர் சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் உள்ள பேய்க்கரும்பு எனும் இடத்தில் அப்துல் கலாம் ஐயா உடல் அடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இன்று பலபேர் தங்கள் உருக்கமான பதிவை பதிவிட்டு வருகின்றனர். மேலும் மேலும் நடிகர்,நடிகைகள் அரசியல்வாதிகள் என பல பேர் தங்களது உருக்கமான பதிவுகளை ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதனிடையே காமெடி நடிகர் விவேக் அப்துல் கலாம் ஐயாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதில் ஒரு கவிதையும் வெளியிட்டிருக்கிறார். அந்த கவிதையாவது "நீ கவிதைகள் எழுதி வைத்தது தாளில்.. ஆனால்... கனவுகள் இறக்கி வைத்தது எங்கள் தோளில்!! அவ்வப்போது இடறுகின்றது; ஆயினும் பயணம் தொடர்கின்றது!! உங்கள் கனவில் நாங்கள்! எங்கள் நினைவில் நீங்கள்! " என்ற உணர்ச்சிமிகு கருத்தை உருக்கமாக எழுதி இருக்கிறார்.



மேலும் இது குறித்து அவரது ரசிகர்கள் இதற்கு கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

Next Story