Kathir News
Begin typing your search above and press return to search.

கறுப்பர் கூட்டம் கந்த சஷ்டி விவகாரத்தில் தி.மு.க தலைவரின் அமைதிக்கு காரணம் என்ன? தூண்டிவிட்டதா அல்லது இந்துமத நிராகரிப்பா?

கறுப்பர் கூட்டம் கந்த சஷ்டி விவகாரத்தில் தி.மு.க தலைவரின் அமைதிக்கு காரணம் என்ன? தூண்டிவிட்டதா அல்லது இந்துமத நிராகரிப்பா?

கறுப்பர் கூட்டம் கந்த சஷ்டி விவகாரத்தில் தி.மு.க தலைவரின் அமைதிக்கு காரணம் என்ன? தூண்டிவிட்டதா அல்லது இந்துமத நிராகரிப்பா?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 July 2020 5:50 AM GMT

கறுப்பர் கூட்டம் கந்த ஷஷ்டி அவமதிப்பு விவகாரத்தில் தி.மு.க சார்பில் இதுவரை எந்த ஒரு கருத்தும் வெளியிடாமல் இருப்பது இந்து சமுதாய மக்களின் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது.

தி.மு.க'வின் செயல்பாடுகள் என்பது தமிழகத்தில் எந்த ஒரு மூலையில் சிறு விஷயங்கள் நடந்தாலும் அதனை வெளிப்படுத்தி "நாட்டில் என்ன நிகழ்கிறது? ஐயகோ பாதுகாப்பில்லையா? மத்திய,மாநில அரசுகள் என்ன செய்கின்றன?" என்று ஆர்ப்பாட்டம் நடத்துவதாகட்டும், அல்லது தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிக்கையாகட்டும், பட்டத்து இளவரசர் உதயநிதி'யின் ட்விட்டர் பக்கத்தின் அலறல் ஆகட்டும் அல்லது கனிமொழி நேரில் சென்று அறுதல் கூறும் வைபவமாகட்டும், குறைந்தபட்சம் முரசொலியின் கபடவேஷ கட்டுரைகளாகட்டும் இப்படி தமிழகத்தின் நிகழ்வுகளை தன்பக்க சாதகமாக்கி தி.மு.க ஒரு அரசியல் களேபரமே அரங்கேற்றி விடும்.

ஆனால் கடந்த 10 நாட்களாக கறுப்பர் கூட்டத்தின் கந்த ஷஷ்டி கவச அவமதிப்பு விவகாரம் இணையத்தை உலுக்கி வருகிறது. இந்து மத மக்களின் உணர்வை, அவர்களின் நம்பிக்கையை அசைத்து பார்க்கும் விதமாகவும், அவர்களை நகையாடும் விதமாகவும், எங்களை என்ன செய்துவிட முடியும் என்ற திமிராகவும் கறுப்பர் கூட்டம் என்ற இந்து விரோத மக்கள் கூட்டத்தின் செயல்கள் அமைந்த போதிலும் அதனை எதிர்த்து அனைத்து இந்து சமுதாய மக்களும் குரல் கொடுத்து, வீடுகளில் முன்நின்று ஆர்ப்பாடம் செய்து குரல் எழுப்பி வரும் வேளையில் தி.மு.க'வோ இது ஏதும் நடக்காதது போல் அல்லது இவை அணைத்தும் வேற்று கிரகவாசிகளின் செயல்கள் போல் கண்டும் காணாமல் செய்வது இந்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காரணம், அவமதிப்பு, சர்ச்சைகள் எழும் போதெல்லாம் நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல என கூறிக்கொண்டும் தேர்தல் வேளைகளில் கோவில்களில் இடுப்பில் துண்டும் வாயெல்லாம் பல்லுமாக அலையும் தி.மு.க'வின் வேட்பாளர்களின் செயல்கள் இந்த சமயத்தில் அவர்கள் அமைதின் பிரதிபலிப்பாக தெரியவில்லை மாறாக கறுப்பர் கூட்டத்தின் அவமதிப்பை ஊக்குவிக்கும் செயலாக உள்ளது.

உடன்பிறப்புகளை விடுங்கள் கட்சி தலைவரின் மனைவி தன் கணவர் முதல்வர் நாற்காலியில் வாழ்வில் ஒருநாளாவது அமர வேண்டும் என அக்கறையுடன் கோவில் கோவிலாக ஏறி இறங்கியதில் காட்டிய வேகத்தை இந்த முருகப்பெருமான் அவமதிப்பு விஷயத்தில் துளிகூட காட்டவில்லை! அவர் மட்டும் என்ன செய்வார் நெற்றியில் வைத்த விபூதியை அழித்த மகானின் மனைவியாயிற்றே! கட்சி தலைவரோ வேறு ரகம் நாங்கள் இல்லை என்றால் தமிழக ஆட்சியே நடக்காது என செயற்கை சிரிப்பும், செயற்கை தலைமுடி சகிதமாய் அனைத்து தி.மு.க ஆதரவு மீடியாக்களின் முன் கொக்கரிப்பாய் சொல்கிறார்.

ஆனால் இந்த விஷயத்தில் "எவனோ விசிலடிக்குறான்" என்கிற ரேஞ்சில் அமைதியாக இருக்கிறார். அரங்கநாதனை பீரங்கியில் வைத்து தகர்ப்போம் என்றவரின் மகனிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் இந்து சமுதாய மக்கள்.

இந்து மத மக்களின் அன்றாட வாழ்க்கையில் காலை வேளையில் அவர்கள் வீடுகளில் ஒலிக்கும் கந்த ஷஷ்டி கவசமென்பது இந்து மத மக்களின் வாழ்வில் ஓர் அங்கம் அதனை இழிவு செய்வதை தடுக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை அதனை எதிர்த்து கேள்வி கேட்க வக்கில்லையா இந்த தி.மு.க'விற்கு அல்லது தூண்டிவிட்டவர்களே இவர்களா என்பதை அவர்கள் தாம் விளக்க வேண்டும்.

Next Story