Kathir News
Begin typing your search above and press return to search.

ரேசன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!

ரேசன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!

ரேசன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 July 2020 6:15 AM GMT

ரேசன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில்,

1. அனைத்து நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கும் போதுமான முகக்கவசம், கையுறைகள், கிருமிநாசினி ஆகியவை வழங்கப்பட்டு உள்ளதை கண்காணித்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவை அந்நியாயவிலைக் கடைகள் நடத்தும். கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பட வேண்டும். நிதி நெருக்கடி போன்றவை காரணமாக இவை வழங்கப்படவில்லை என்ற புகார்கள் ஏதும் எழாமல் மாற்று ஏற்பாடுகள் செய்து, அனைத்து நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கும் இவை. வழங்கப்படுவதை மண்டல இணைப்பதிவாளர்கள்/ இணைப்பதிவாளர் சென்னை 1 மற்றும் 2, சென்னை ஆகியோர் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

2. ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவுரைகளின்படி, மாவட்ட ஆட்சியர்/ சுகாதாரத்துறை இணை இயக்குநர்/ சென்னை மாநகராட்சி ஆணையர்/ தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழக மண்டல கிடங்குகளின் பொறுப்பாளர் ஆகியோரை தொடர்பு கொண்டு , நியாய விலைக் கடை பணியாளர்களுக்குத் தேவையான சத்து மாத்திரைகளையும் , கபசுரக் குடிநீர் போன்ற மருந்துகளையும், பெற்று நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் ஒருமுறை வழங்குவதோடு நிறுத்தி விடாமல் , இப்பணியாளர்களுக்கு தேவையான மேற்படி மருந்துகள் அவர்கள் தினசரி பயன்படுத்த தேவையான அளவு பெற்று தொடர்ச்சியாக வழங்கப்படுவதை கண்காணித்து உறுதி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

3. தங்கள் மண்டலத்திலுள்ள கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து 500 மீட்டர் சுற்றளவுக்குள் உள்ள நியாயவிலைக்கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவருக்கும் கட்டாயமாக இலவச கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்து அதனை கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், கட்டுப்பாட்டு பகுதிகள் மட்டுமின்றி, பிற பகுதிகளிலும் செயல்படும் நியாயவிலைக் கடையில் பணிபுரியும் விற்பனையாளர் / கட்டுநர் எவரேனும் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டாலும் , மற்றொரு நபர் உடன் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதை உறுதி செய்யவும் , தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படுவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்படுகிறது.

4. மேற்படி, கட்டாய பரிசோதனைகளின் வாயிலாகவும், வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் வாயிலாகவும், கொரோனா வைரஸ் தொற்று உறுதியான பணியாளர்களுக்கு உடனடியாக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சைகள் அளிக்கப்படுவதை கண்காணித்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

5. கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நியாவிலைக் கடை பணியாளர்கள் பணிபுரிந்த நியாயவிலைக் கடைகள் உடனடியாக கிருமிநாசினி கொண்டு கிருமி நீக்கம் செய்ய அறிவுறுத்தி அதனை கண்காணிக்க வேண்டும்.

6. மேற்படி நியாயவிலைக்கடைகள் மாற்று பணியாளர்களை கொண்டு, தடையின்றி செயல்படுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

7. கொரோனா தொற்றிலிருந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுரைப்படி, வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ள காலத்திற்கு இப்பணியாளர்கள் வீட்டிலேயே தனிமையில் இருப்பதை உறுதி செய்து அதன் பின் அவர்கள் பணியில் மீண்டும் சேர அனுமதிக்க வேண்டும்.

8. இப்பணியாளர்கள், சிகிச்சைக்காக, அனுமதிக்கப்பட்ட காலத்திலும், வீட்டில் தனிமையில் இருக்கும் காலத்திலும், அப்பணியாளர்களது குடும்பத்தினருக்கு தேவையான உதவிகள் செய்யவும், மனதளவில், அவர்களது பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ளவும், அப்பணியாளர்கள் சார்ந்துள்ள சங்க நிர்வாகத்தினருக்கு அறிவுரை வழங்கி அதனைக் கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News