Kathir News
Begin typing your search above and press return to search.

டிக்டாக் செயலியை செல்போனில் இருந்து நீக்குமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்திய அமேசான் நிறுவனம் - சீனாவுக்கு அதிகரிக்கும் எதிர்ப்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 July 2020 6:49 AM GMT

சீனா நாட்டின் செயலியான டிக்டாக்கால் பாதுகாப்பு குறைவு இருக்கிறது என தன்னுடைய நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களை பயன்படுத்துவதில் இருந்து வெளியேற வேண்டுமென அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனைப்பற்றி அமேசான் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு அந்நிறுவனம் இ-மெயில் அனுப்பி உள்ளது. அதில் டிக் டாக் வீடியோ செயலியை உங்களுடைய செல்போனில் இருந்து நீக்குமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தங்களுடைய நிறுவனத்துக்கு இ-மெயில் அனுப்பும் செல் போனில் டிக் டாக் செயலியை உபயோகப்படுத்த கூடாது என குறிப்பிட்டுள்ளது. அப்படி அந்த செயலியை வைத்து இருந்தால் உடனே நீக்குமாறு தெரிவித்துள்ளது.

மேலும், அதே சமயத்தில் லேப்டாப்பில் டிக் டாக் செயலியை உபயோகப்படுத்துவதில் இருந்து விலக்கு கொடுப்பதாகவும் அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Next Story