Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதம மந்திரி வீடு திட்டத்தின் பணத்தை மோசடி செய்த அதிகாரிகள்.. பரிதாபமாக உயிர் இழந்த பெண்.!

பிரதம மந்திரி வீடு திட்டத்தின் பணத்தை மோசடி செய்த அதிகாரிகள்.. பரிதாபமாக உயிர் இழந்த பெண்.!

பிரதம மந்திரி வீடு திட்டத்தின் பணத்தை மோசடி செய்த அதிகாரிகள்.. பரிதாபமாக உயிர் இழந்த பெண்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 July 2020 4:10 AM GMT

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள புருஷோத்தம குப்பம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி இவரது மனைவி அய்யம்மாள் இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆவார். இவர்களுக்கு ராகுல் காந்தி என்ற மகன் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், இந்த தம்பதியருக்கு பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தருவதாக ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலமாக ஏற்பாடுகள் செய்து தருவதாக கூறியுள்ளனர். மேலும், அவரிடம் இருந்து ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆதாரங்களை அதிகாரிகள் வாங்கி சென்றுள்ளனர். இதன் பின்னர் வீடு கட்டி முடித்தமாதிரி ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் பணத்தை அதிகாரிகள் மோசடியாக ஏமாற்றியுள்ளனர்.

வீடு கட்டித்தராமல் ஏமாற்றப்பட்டது அப்போதுதான் அய்யம்மாளுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அய்யம்மாள் மற்றும் அவரது கணவர், மகன் பழைய ஓலை குடிசையிலேயே வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று வாணியம்பாடி பகுதியில் கனமழை பெய்தது. இந்த மழையின்போது அய்யம்மாள் வீட்டில் இருந்துள்ளார். அப்போது சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் பரிதாபமாக அய்யம்மாள் உயிரிழந்துளளார். இந்த தகவல் அறிந்ததும் அதிகாரிகள் இறந்தவரின் உடலை மீட்க சென்றபோது, அக்கிராம மக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். இறந்த அய்யம்மாள் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பிரதமர் மந்திரி திட்டத்தின் கீழ் வீடு கட்டித்தருவதற்கு பிரதமர் அலுவலகம் முயற்சிகளை மேற்கொண்டாலும், இது போன்ற கீழ் நிலையில் உள்ள அதிகாரிகள் பணத்தை முறைகேடு செய்வது தினமும் வாடிக்கையாகவே வைத்துள்ளனர். இது போன்ற அதிகாரிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமும் ஆகும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News