Kathir News
Begin typing your search above and press return to search.

வெளிப்படையாக வெடித்தது ஐபேக் - தி.மு.க ஐ.டி விங் மோதல்! கடிவாளம் கழன்றதால் கட்சியை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் ஸ்டாலின்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 July 2020 12:00 PM GMT

கறுப்பர் கூட்டம் தொடர்பான விவகாரம் பெரிதான பிறகு, தி.மு.க-தான் அதன் பின்னணியில் இருந்து இயக்குகிறது என்கிற குற்றச்சாட்டு சமூக வலைதளங்களில் பெரிதாக முன் வைக்கப்படுகிறது.

இந்த நிலையில், கறுப்பர் கூட்டத்தின் சேனல் நிர்வாகியான செந்தில் வாசனோடு தி.மு.க-வின் ஐ.டி விங் செயலாளர் பழனிவேல் தியாகராஜன் இருப்பது போன்ற புகைப்படங்களைக் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த விவகாரத்தை ஸ்டாலினிடம் ஐபேக் போட்டுக் கொடுத்துவிட்ட நிலையில், இன்றைக்கு ஊடகங்களில் செய்தியாவும் வெளியிடப்பட்டது.

இது குறித்து தியாகராஜனிடம் ஸ்டாலின் தரப்பு நடத்திய விசாரணையில், அவர் அளித்த விளக்கம் திருப்தியளிக்காததால், ஸ்டாலின் அதிருப்தியில் இருப்பதாக கூறுகின்றனர்.

ஏற்கெனவே திமுக ஐ.டி விங் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்ற போது , ஐபேக் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போயிடும். நமக்குக் கட்சிதான் முக்கியம். உங்களுக்கு டார்கெட் கொடுத்திருக்கேன்.

அதை முதலில் முடிக்க வேண்டும். பிறகு ஐபேக்குக்கு வேலை பார்க்கலாம் என்று தியாகராஜன் கூறியிருந்ததை, ஐபேக் தரப்பு கெளரவப் பிரச்னையாக எடுத்துக் கொண்டது.

இன்னும் சில மாதங்களில் தேர்தல் நெருங்கி விடும் என்ற நிலையில், கட்சிக்குள்ளேயே இருதரப்பும் ஆளுக்கொரு பாதையில் பயணிப்பதை சமாளிக்க முடியாமல் ஸ்டாலின் திணறுகிறார்.

Next Story