Kathir News
Begin typing your search above and press return to search.

அப்பன் முருகனைப் பழிக்கும் இந்து துவேஷ கருப்பர் கூட்டத்தின் பின்னணியில் இருப்பது யார்? - பகீர் தகவல்கள்.!

அப்பன் முருகனைப் பழிக்கும் இந்து துவேஷ கருப்பர் கூட்டத்தின் பின்னணியில் இருப்பது யார்? - பகீர் தகவல்கள்.!

அப்பன் முருகனைப் பழிக்கும் இந்து துவேஷ கருப்பர் கூட்டத்தின் பின்னணியில் இருப்பது யார்? - பகீர் தகவல்கள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 July 2020 2:26 AM GMT

திமுகவின் தாய் இயக்கமான திராவிடர் கழகம், அதன் கிளை இயக்கங்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிலர் வகை வகையாக யூட்யூப் சேனல் தொடங்கி, மதச்சார்பற்று இந்து மதத்தில் இருக்கும் குறைகளைச் சுட்டிக் காட்டுகிறோம் என்ற பெயரில் இந்து மதத்தையும் மத நம்பிக்கைகளையும் இழிவு படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்த வரிசையில் ஒலிக்காத இடமே இல்லை என்று சொல்லுமளவுக்கு தமிழர்களின் வாழ்வில் ஒன்றிப் போன கந்தர்சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி அண்மையில் கருப்பர் கூட்டம் என்ற சேனலில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

இந்துக் கடவுள்களையும் இந்துக்களையும், குறிப்பாக பிராமணர்களையும் இழிவுபடுத்தும் விதமாக பல வீடியோக்களை வெளியிட்டுள்ள இந்த சேனலில் ஆபாச புராணம் என்று பெயர் வைத்து சரஸ்வதி, பிரம்மா, முருகன் போன்ற கடவுளர்களைப் பற்றி தகாத வார்த்தைகளால் ஆபாசமாகப் பேசியதோடு இப்படித் தான் புராணத்தில் எழுதியிருக்கிறது, அதனால் தான் இந்தப் பெயர் என்று நியாயப்படுத்த வேறு செய்கின்றனர்.

இந்த கருப்பர் கூட்டத்தின் அங்கமான சுரேந்தர் நடராஜன் என்பவன் சரஸ்வதி புராணம் என்று தலைப்பிட்டு 'சரஸ்வதி பிரம்மாவோட நாக்கில் உக்காந்திருப்பதாக‌ சொல்கிறீர்களே சிறுநீர் வந்தால் எங்கே கழிப்பாள்? வயிறு சரியில்லை என்றால் எங்கே போவாள்? என்று கேட்டால் பதிலில்லை. அவள் நாக்கில் இருக்கிறாள் என்று சொல்லும் நீங்கள் பிரம்மாவின் வாயில் கழிவறை கட்டி விட்டிருக்கிறது என்றும் சொல்ல வேண்டாமா?' என்று மிகவும் கீழ்த்தரமாக பகுத்தறிவு என்ற பெயரில் நம்பிக்கைகளை அவமதிக்கும் விதத்தில் பேசி இருக்கிறான்.

மற்றொரு வீடியோவில் ஈவெ ராமசாமி நாயக்கரின் உருவப்படம் பொறித்த சட்டையை அணிந்து கொண்டு ஸ்ரீ கிருஷ்ணரும் நாரதரும் சந்தித்ததைப் பற்றி ஆபாசமாக நாரதர் போகும் வீட்டில் எல்லாம் கிருஷ்ணர் அவ்வீட்டுப் பெண்களுடன் சமாச்சாரம் செய்து கொண்டிருந்தார் என்றும் இறுதியில் நாரதர் கிருஷ்ணருடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்று கேட்டதாகவும் நாக்கூசாமல் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டுள்ளான்.

மரியாதா புருஷோத்தமர் ராமரையும், பிராட்டி சீதையையும் நட்புக்கும் பக்திக்கும் இலக்கணமான அனுமனையும் இவர்களைப் பற்றி காவியம் படைத்த கம்பரையும் கூட விட்டு வைக்கவில்லை இந்த கழிசடைப்‌ பிறவி.

இவ்வாறு திமுக மற்றும் திராவிடர் கழக பண்பாடுகளுக்கு சற்றும் குறைந்துவிடாமல் பகுத்தறிவு என்ற பெயரில் இந்து மத துவேஷத்தில் ஈடுபட கண்ணில் படுவதில் எல்லாம் ஆபாசம் காணும் இந்தக் கயவன் சுரேந்திரன்‌ நடராஜன் கடந்த காலத்தில் திமுகவுக்காக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளான்.

இந்தக் கயவர்கள் கூட்டத்தின் மற்றொரு அங்கம் சிற்பி ராஜன் என்பவன். மாயாஜால தந்திரங்களை செய்து காண்பிக்கும் ஒரு வீடியோவில் மந்திராமாகும் நீறையும் குங்குமத்தையும் தரித்த குழந்தைகளிடம் 'சாமி கயிறுக்கு சக்தி இருக்குதா? அப்படி என்றால் கத்திரிக்கோல் உடைந்து விடும்' என்று கூறி சாமி கயிற்றை கத்தரிக்கிறான்.

ஒரு தந்திரத்தை செய்து காண்பித்து கொண்டே 'கோவிலில் அபிஷேகம் நடக்கும் போது பார்த்திருக்கிறீர்களா? அப்போது என்ன செய்வீர்கள்?' என்று கேட்கிறான். 'சாமி கும்பிடுவோம்' என்று அவர்கள் பதிலளிக்கிறார்கள். 'கடவுள் சாப்பிடும் போது பூசாரி என்ன செய்வார்?' என்று அவன் கேட்க, 'திரை போட்டு மூடி விடுவார்கள்' என்று குழந்தைகள் கூறுகின்றனர். 'திரையைத் திறந்து வைத்துக் கொண்டு கடவுளைக் குளிப்பாட்டுகிறீர்கள். ஆனால்‌ சாப்பிடும்‌ போது திரையை மூடி‌ விடுகிறீர்களே என்று நீங்கள் அவர்களிடம்‌ கேட்க வேண்டும்' என்று கூறிவிட்டு 'சாப்பிடும் போது ஏன் திரை போடுகிறார்கள் என்று தெரியுமா? கடவுளுக்கு படைக்கப்பட்ட உணவை திருட்டுத்தனமாக பூசாரி தின்பதற்கு தான்' என்று வியாக்கியானம் அளித்திருக்கிறான்.

இது போதாதென்று 'ஏன் இந்த பெண்‌ கடவுள் அனைவரும் பார்க்க குளித்துவிட்டு சாப்பாடு மட்டும் தனியே சாப்பிடுகிறாள் என்று உங்கள் பெற்றோரிடம் கேளுங்கள்' என்று பிஞ்சு மனங்களில் நஞ்சை விதைத்து பெற்றோருக்கு எதிராக பிள்ளைகளைத் தூண்டி வேறு விடுகிறான்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுந்தரவள்ளி என்பவள் சுரேந்திரன் நடராஜனுடன் புராணங்களைப் பற்றிக் கலந்துரையாடுவதாகக் கூறி இந்துக் கடவுள்களைப் பழித்துப் பேசுகிறாள். தான் சைவத் திருமுறைகளை வாசித்திருப்பதாகவும் அவற்றில் ஆபாசம் நிறைந்து இருப்பதாகவும் "அசிங்க அசிங்கமா இருக்கும்; கேவல கேவலமா இருக்கும்" என்று கூறியிருக்கிறாள். புராணஙகளில் ஆபாசம் நிறைந்திருப்பதாகக் கூறும் அவள் மற்றொரு பகுதியில் வேதங்கள், புராணங்கள், இதிகாசங்களைத் தாக்கி இந்துக்களைப் பிரிப்பதே முதன்மையான நோக்கம் என்று உண்மையைப் போட்டு உடைக்கிறாள்.

நியூஸ்18 தொலைக்காட்சியின் ஹசீப் முகமது கருப்பர் கூட்டம் சேனலுக்கு மிகுந்த ஆதரவளிபபதாகக் கூறப்படுகிறது. Centre of Media Persons for Change (CMPC) என்ற அமைப்புடன் தொடர்புடைய பத்திரிகையாளர்களும் இவர்களுக்கு ஆதரவாக இருப்பதாக தெரிகிறது. திராவிடர் கழகம், திராவிடர் முன்னேற்ற கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கம்யூனிஸ்ட் கட்சி போன்ற இந்து விரோதக் கூடாரங்களில் இருந்து அடிக்கடி கருப்பர் கூட்டம் சேனலின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள்.

நியூஸ்18 தொலைக்காட்சியைப் பற்றி மாரிதாஸ் வெளியிட்ட வீடியோவில் அவர்களுக்கும் கருப்பர் கூட்டம் சேனலுக்கும் உள்ள தொடர்பு பற்றி வெளிப்படுத்தியதில் இருந்து தொல்.திருமாவளவன், சுப.வீரபாண்டியன் போன்ற பொங்கற்‌ சோற்றுக்கு பேயாடும் கூட்டம் கருப்பர் கூட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கருத்துகளை வெளியிட்டு வருகிறது.

சுரேந்தர் நடராஜனும் சொரணை கெட்ட இந்துக்களால் என்ன செய்து விட முடியும் என்று ஆபாச புராணம் தொடர் தொடரும் என்று வீடியோ செய்தி வெளியிட்டுள்ளான். இவனைப் போல் பல பகுத்தறிவு வேஷம் போடும் ஈவெரா அடிபபொடிகள் மற்றும் கம்யூனிஸ்ட் கயவர்கள் இந்து மத துவேஷத்துக்கு என்றே கருப்பர் தேசம், குலுக்கை, U2 Brutus என்று பல பெயர்களில் யூடியூபில் சேனல் தொடங்கி இந்து மத நம்பிக்கைகளைப் புண்படுத்தி வருகிறார்கள். பலரும் இந்த சேனல்கள் மீது புகார் செய்தும் மத நம்பிக்கைகளைப் புண்படுத்தியும், வன்முறையைத் தூண்டும் விதமாகவும் ஆபாசமான கருத்துக்களைக் கொண்டிருக்கும் இந்த வீடியோக்களை யூடியூப் நிர்வாகம் நிறுத்தியதாகவோ, நீக்கியதாகவோ தெரியவில்லை.

இதையடுத்து தமிழக பிஜேபி சார்பில் அஸ்வத்தாமன் கருப்பர் கூட்டம் சேனலின் பின்னணியில் இருப்பவர்கள், பங்கேற்பாளர்கள், நெறியாளர்கள், தொகுப்பாளர்கள் என அனைவர் மீதும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 153 (A), 295, 295 (A), 296, 298, 499, 504, 188 ஆகியவற்றின் கீழும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 67ன் கீழும்‌ வழக்கு பதியுமாறு புகார் அளித்துள்ளார். இந்து முன்னணி முதல்வர் இவன் ஈர்ப்புப் போராட்டமாக மாவட்டம் தோறும் ஆட்சியர்களிடம் தமிழர் கடவுளை, இந்து மதத்தை கேவலப்படுத்தியவர்களை கைது செய்யக்கோரியும்‌‌ தமிழகத்தில் தொடரும் இந்து விரோத சக்திகளின் செயல்பாடுகளை தடை செய்யக்கோரியும் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

Next Story