Kathir News
Begin typing your search above and press return to search.

இந்த ரோடும் இனி எனக்குத்தான் சொந்தம் - அடுத்த லெவலுக்கு இறங்கிய தி.மு.க பிரமுகரின் நில அபகரிப்பு மோசடி!

இந்த ரோடும் இனி எனக்குத்தான் சொந்தம் - அடுத்த லெவலுக்கு இறங்கிய தி.மு.க பிரமுகரின் நில அபகரிப்பு மோசடி!

இந்த ரோடும் இனி எனக்குத்தான் சொந்தம் - அடுத்த லெவலுக்கு இறங்கிய தி.மு.க பிரமுகரின் நில அபகரிப்பு மோசடி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 July 2020 5:02 AM GMT

ஆட்சி அதிகாரத்தில் இல்லாத நிலையிலும், தி.மு.கவின் அடாவடித்தனம் குறைந்தபாடில்லை. சமீபத்தில் "ஒன்றிணைவோம் வா" திட்டத்தில் புகார் கொடுத்தவரின் நிலத்தையே திமுக பிரமுகர் அபகரித்த சம்பவம் வைரலான நிலையில், தற்போது தி.மு.க.,வை சேர்ந்த, மாவட்ட ஊராட்சி கவுன்சிலரின் கணவர், பொது பாதையில் பள்ளம் தோண்டி சேதப்படுத்தியதாக, காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே, மருதூர் ஊராட்சியை சேர்ந்த விவசாயிகள், 350 ஏக்கரில் நெல், வாழை பயிர்கள் சாகுபடி செய்து வருகின்றனர்.

விவசாய நிலங்களுக்கு சென்று வர, பாதை வசதி இல்லாததால், விவசாயிகள் அனைவரும், அவரவர் விவசாய நிலத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி, 13 ஆண்டுகளுக்கு முன், 15 அடி அகலத்தில், 1 கி.மீ.,க்கு மண் சாலை அமைத்துக் கொண்டனர்.

தி.மு.க.,வை சேர்ந்த மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் தீபாவின் கணவர் சுதாகர் என்பவர், சமீபத்தில், இந்த பாதையின் கடைசியில் உள்ள, 9 ஏக்கர் நிலத்தை வாங்கி, விவசாயிகள் பயன்படுத்தி வந்த பொது பாதையில், பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டியுள்ளார்.

இது குறித்து மருதூர் கிராம தலைவர் கோபி, சமயபுரம் காவல்துறையினரிடத்தில் புகார் அளித்துள்ளார். சுதாகரின் மனைவி தீபா, தி.மு.க சார்பில், மாவட்ட ஊராட்சி கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டவர். அதனால், அக்கட்சியின் முதன்மை செயலர் நேருவிடம், விவசாயிகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பொது பாதையில், விவசாயிகள் பயன்படுத்த முடியாத வகையில், பள்ளம் தோண்டியதை கண்டித்து, போராட்டம் நடத்த உள்ளோம் என்று அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Next Story