Kathir News
Begin typing your search above and press return to search.

உதயநிதியுடன் தி.மு.க.வில் இணைகிறாரா மீரா மீதுன்?

உதயநிதியுடன் தி.மு.க.வில் இணைகிறாரா மீரா மீதுன்?

உதயநிதியுடன் தி.மு.க.வில் இணைகிறாரா மீரா மீதுன்?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 July 2020 10:32 AM GMT


பிக்பாஸ் போட்டியாளரான மீரா மிதுன் அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருவார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே, எனினும் பலர் அவரை கமெண்ட் அடித்து வந்தாலும் அவர் அதுக்கும் சலிக்காமல் அவர் போக்கிற்கு சர்ச்சைக்குரிய போஸ்ட் போட்டு கொண்டுதான் இருப்பார்.

குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரஜினி மற்றும் விஜய் மீது அவர் பதிவு செய்த ஒரு டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி ரஜினியை கன்னடர் என்றும் விஜய்யை கிறிஸ்துவர் என்றும் இருவர் மீதும் தான் சைபர் கிரைமில் புகார் அளிக்கப்போவதாகவும் கூறியிருந்தது.

மேலும் திரிஷாவை தான் யூஸ் பண்ணும் தன் ஸ்டைலை அவர் செய்வதாக கூறி, அவரையும் சிலகாலம் சமூகவலைத்தளங்களில் இருந்து நீக்க வைத்தார் மீரா மிதுன்.

தற்போது மீரா மிதுன் "புதிய சகாப்தத்தை உருவாக்குவோம்" என்று உதயநிதியின் டுவிட்டர் பக்கத்தை குறிப்பிட்டும் "நாம் இணைந்து வெற்றி பெறுவோம்" என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் டுவிட்டர் பக்கத்தை குறிப்பிட்டும் பதிவு செய்துள்ளார்.



இந்த டுவிட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விரைவில் அவர் திமுகவில் சேர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் விரைவில் செய்திகள் வரும் என்றும் தெரிவித்திருந்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News