Kathir News
Begin typing your search above and press return to search.

டூப் காட்சிகளை வெளியிட்ட நடிகர் சதீஷ்.!

டூப் காட்சிகளை வெளியிட்ட நடிகர் சதீஷ்.!

டூப் காட்சிகளை வெளியிட்ட நடிகர் சதீஷ்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 July 2020 1:38 PM GMT


தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் சதீஷ். இவர் எதிர்நீச்சல், பைரவா, கத்தி ,தமிழ் படம் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக இவர் பல மீம்ஸ்களையும்,பல காமெடி களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். அதுபோலவே தற்போது இவர் ஜீவாவுடன் இணைந்து நடித்த கொரில்லா பட செட்களில் இருந்து லூட்டியடிக்கும் வீடியோவை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் ஒரு துணியைப் பயன்படுத்தி சதீஷ் தரையில் இருந்து மேல் மாடிக்கு இழுக்கப்படுவது போல் ஒரு காட்சி வந்துள்ளது.அதனை படம்பிடிக்கும் ஜீவா, சதீஷ் எப்படி ஸ்டண்ட் முயற்சிக்கிறார் என்று குரல் கொடுக்கிறார். ஆனால் ஜீவா தனது கேமராவை சற்று திருப்பினார்.சதீஷ் உண்மையில் பத்திரமாகவும் ஜாலியாகவும் கீழே நின்று கொண்டிருக்கிறார்.

இது என்னவென்று பார்த்தால் இவர் செய்யும் அனைத்து வேலைகளையும் அவர் டுப் செய்து கொண்டிருக்கிறார். இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டிருந்தார் அதற்கு "ஓ அது டூப்பா அது ஒரிஜினல் நீ தான்பா டூப்" என தலைப்பிட்டுள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Next Story