Kathir News
Begin typing your search above and press return to search.

"யுத்த களத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக படைகளை அனுப்பி தோளோடு தோளாக நிற்போம்" : பிரான்ஸ் அறிவிப்பு!

"யுத்த களத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக படைகளை அனுப்பி தோளோடு தோளாக நிற்போம்" : பிரான்ஸ் அறிவிப்பு!

யுத்த களத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக படைகளை அனுப்பி தோளோடு தோளாக நிற்போம் : பிரான்ஸ் அறிவிப்பு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 July 2020 5:10 AM GMT

இந்தியாவுக்கும் - சீனாவுக்கும் இடையே கல்வான் எல்லையில் நடைபெற்ற மோதல்களை அடுத்து முன்னெப்போதும் இல்லாத வகையில் போர் தொடர்பான பதற்றங்கள் எல்லைப் பகுதியில் காணப்படுகிறது. இரு நாட்டு படைகளும் எல்லைப் பகுதிகளில் குவிக்கப்படும் அதே நேரத்தில் இந்தியா சீனாவுக்கு உரிய பாடம் புகட்டும் வகையில் சீன பொருள்களை படிப்படியாக பகிஷ்கரிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவுக்கு எப்போதும் நவீன ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்களை சப்ளை செய்து வரும் வல்லரசு நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் "யுத்தம் ஏற்பட்டால் யுத்தகளத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக தனது படைகள் நிச்சயமாக அனுப்பி வைக்கப்படும்" என வெளிப்படையாக அறிவித்துள்ளது.

உலகில் அமரிக்கா, ரஷ்யா உட்பட பெரிய நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தரும் விஷயத்தில் ஒப்புதலாக இருப்பதாக அறியப்பட்டாலும், எந்த நிபந்தனைகளும் இல்லாமல் வெளிப்படையாக தனது ஆதரவை முதன் முதலாக அறிவித்திருப்பது பிரான்ஸ் நாடு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லி இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு எழுதிய கடிதத்தில் எல்லையில் வீர மரணம் அடைந்த இந்திய வீரர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

சீனாவினால் ஏற்படுத்தப்பட்ட இந்த துன்பத்தால் பாதிப்பு அடைந்துள்ள இந்திய தேசத்துக்கும், படை வீரர்களின் குடும்பத்துக்கும் இந்த இக்கட்டான நேரத்தில் பிரான்ஸ் தனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது என்று கூறிய அவர் "கடுமையான வைரஸ் பாதிப்பு சூழ்நிலையிலும், பிராந்தியத்தில் சீன மோதல்களை தொடர்ந்து இந்தியாவில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை உணர்கிறோம், இதில் இந்தியாவுடனான எங்களது அசைக்க முடியாத உறுதிப்பாட்டை காட்ட பிரான்ஸ் எதிர்பார்ப்பதாகவும், மக்ரோனும் அவரது ஆளும் கட்சியும் இந்தியாவுடனான அதன் ஆழ்ந்த ஒற்றுமையை மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றன, அதற்கான சந்தர்பத்துக்காக காத்திருக்கிறது பிரான்ஸ்" என்றும் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கான ரபேல் போர் விமானங்களை இப்போது பிரான்ஸ் தனது நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் இருக்கும் சூழ்நிலையிலும் திட்டமிட்டவாறு அனுப்பி வைத்து வருகிறது என்பது குறிபிடத்தக்கது. வரும் ஜூலை 27-க்குள் 6 ரபேல் விமானங்கள் இந்தியா வந்து சேரவுள்ளன. பிரான்ஸ் அனுப்பும் இந்த நவீன விமானங்கள் அனைத்தும் இந்திய - சீன - பாகிஸ்தான் எல்லைகளில் உள்ள இந்திய விமானப்படை விமான தளங்களில் நிறுத்தப்படவுள்ளன. இந்த நிலையில் தனது துருப்புக்களையும் பிரான்ஸ் இந்தியாவுக்கு ஆதரவாக யுத்த களத்துக்கு அனுப்பி வைப்பதாக அறிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Source - TFI Post

Next Story
கதிர் தொகுப்பு
Trending News