Kathir News
Begin typing your search above and press return to search.

இடைத்தேர்தல்கள் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் விளக்கம்.!

இடைத்தேர்தல்கள் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் விளக்கம்.!

இடைத்தேர்தல்கள் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் விளக்கம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 July 2020 12:32 PM GMT

தேர்தல் ஆணையத்தின் மூத்த முதன்மை செயலர் திரு.சுமித் முகர்ஜி, எண்.99/இடைத்தேர்தல்/ 2020/இபிஎஸ் - 22.07.2020 தேதியிட்ட அறிவிக்கையை வெளியிட்டார். இது சில ஊடகங்களில் சிறிது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்குறிப்பிட்ட இந்த அறிவிக்கை, மத்திய சட்டம் நீதித்துறை அமைச்சகத்தின் கடிதத்தில் (எண்.99/இடைத்தேர்தல்/ 2020/இபிஎஸ் - 03.07.2020 தேதியிட்டது) குறி்ப்பிடப்பட்டுள்ள 8 தொகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த 8 தொகுதிகள் உட்பட மொத்தம் 56 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது. இந்த 57 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்துவதற்கான முடிவினை ஏற்கனவே ஆணையம் எடுத்துள்ளதாகவும் அது தெளிவுபடுத்தியுள்ளது. எந்த நிலையிலும் 8 இடைத்தேர்தல்களும் 2020 செப்டம்பர் 7ந்தேதி வரை மட்டுமே ஒத்திவைக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் கூட்டம் 24.07.2020 அன்று நடைபெற உள்ளது.





Next Story
கதிர் தொகுப்பு
Trending News