Kathir News
Begin typing your search above and press return to search.

பிகாரில் பா.ஜ.க வளர்ச்சியை முடக்கும் சுசில் மோடியின் நாற்காலி - ஆளும் கூட்டணியில் குழப்பமா?

பிகாரில் பா.ஜ.க வளர்ச்சியை முடக்கும் சுசில் மோடியின் நாற்காலி - ஆளும் கூட்டணியில் குழப்பமா?

பிகாரில் பா.ஜ.க வளர்ச்சியை முடக்கும் சுசில் மோடியின் நாற்காலி - ஆளும் கூட்டணியில் குழப்பமா?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 July 2020 7:49 AM GMT

பீகார் மாநில துணை முதலமைச்சர் சுசில் மோடி லோக் ஜன சக்தி கட்சியின் தலைவரும், ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ள கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். லோக் ஜன சக்தி கட்சியின் தலைவரான சிராக் பஸ்வான் நாட்டில் கொரோனா பிரச்சினைகளினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்துவது சரியில்லை என கருத்து தெரிவித்திருந்தார். ராஸ்ட்ரிய ஜனதாதள கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவும் இதே கருத்தை தெரிவித்திருந்தார்

இவர்கள் கூறிய கருத்திற்கு சுஷில் மோடி இவற்றை எதிர்த்து கருத்து தெரிவித்துள்ளார். "தேர்தலில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற பயத்தில் பள்ளியில் மாணவர்கள் கூறும் காரணத்தைப் போல் பேசுகின்றனர்" என்று அவர்களை குறிப்பிடாமல் அவர்களை கருத்தால் தாக்கியுள்ளார். தேர்தல் நடக்குமா நடக்காதா என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்றும், தேர்தல் ஆணையத்தின் முடிவை தேசிய ஜனநாயக கூட்டணி பின்பற்றும் என்றும் பீகார் மாநில துணை முதலமைச்சர் சுஷில் மோடி தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் ஆணையதத்தின் முடிவை எடுப்பதில் எந்த கட்சிக்கும் இக்கட்டத்தில் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள இளம் தலைவரான சிராக் பஸ்வான் வளர்ச்சி சுஷில் மோடிக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது. இதுவரை அவர் பிஹார் மாநில பா.ஜ.க-வில் எந்த ஒரு இளம் பா.ஜ.க தலைவரின் வளர்ச்சியையும் வரவேற்றதில்லை. அவர் பதவியை பறிபோக விடாமல் இருப்பதற்காக தனது கூட்டணி சார்ந்தவர்களின் மீது எதிர் கருத்து தெரிவிப்பதாக தெரிகிறது. பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமாருடன் மிகுந்த நெருக்கம் உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த முறையும் நிதிஷ்குமார் முதலமைச்சர் பதவியில் அமர்ந்தால் தனக்கு துணை முதலமைச்சர் பதவி கிடைக்கும் என்பதை கருத்தில் கொண்டு செயல்படுகிறார்.

ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணி பீகார் மாநில தேர்தலில் நிதீஷ் குமார் முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துள்ளது. இக்கட்டத்தில் கொரோனா பிரச்சனைகளினால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு வேட்பாளர்கள் மாற்றப்படும் என்ற அச்சத்தில் தேர்தலை இப்போதே நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார் என தெரிகிறது.ஆகையால் நிதீஷ்குமார் உடைய பதவியும் தன்னுடைய பதவியையும் பாதுகாக்கவே சுஷில் மோடி இளம் தலைவர்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார் என்பது தெரிய படுகிறது.

பீகார் பா.ஜ.க மாநில உறுப்பினர்களே நிதிஷ் குமாரை எதிர்த்து பேசிய போது சுஷில் மோடி அவருக்கு ஆதரவாக பேசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடக்கவிருக்கும் தேர்தலில் பா.ஜ.க வெற்றியடைய சுசில் மோடியை நீக்கிவிட்டு இளம் தலைவர் ஆன சிராக் பஸ்வான்க்கு வாய்ப்பு கொடுப்பது அவர்களின் வெற்றி வாய்ப்பை இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

சுசில் மோடி கடந்த 15 ஆண்டுகளாக இவர் மட்டுமே பா.ஜ.க முகமாக இருந்துக் கொண்டிருக்கிறார். இத்தகைய சூழ்நிலையில் சுசில் மோடியை தவிர்த்து மற்ற தலைவர்களுக்கு வாய்ப்பு தருவதில் பா.ஜ.க உடைய வளர்ச்சி பீகாரில் இருக்கும் என கூறப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News